மண்டியிடுங்கள் தந்தையே : எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் | Mandiyidungal Thandhaiye
’மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்புதான் நாவலின் மையப்பொருள். டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வுதான் நாவலின் கதைக்கரு. அவரது வாழ்க்கை வரலாற்றில் இரண்டு வாக்கியங்களில் அந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நான் எனது கதையை உருவாக்கிக் கொண்டேன். டால்ஸ்டாய் முன்பாக அமர்ந்து சிறுவர்கள் கதை கேட்பதுபோல ஒரு புகைப்படம் இருக்கிறது. நாவலை எழுதும் நாட்களில் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகவே என்னை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாவலை எழுதினேன். ஐந்தாறு முறை திருத்தி எழுதியிருப்பேன். லாக்டவுன் காலம் என்பதால் நிறைய நேரம் கிடைத்தது. காலை சென்னையில் எனது வீட்டின் எழுதும் அறைக்குள் நுழைந்த மறுநிமிடம் ஒரு கால இயந்திரம் என்னை டால்ஸ்டாய் பண்ணைக்கு அழைத்துப் போய்விடும். பகல் முழுவதும் ரஷ்யாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். டால்ஸ்டாய் குடும்பத்தில் ஒருவன் போலவே என்னையும் உணர்ந்தேன்.
மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள். பெரும்பகுதி வாழ்க்கை அடுத்தவர்களுக்கானது. வேலைக்கானது,சம்பாத்தியத்திற்கானது.
ஒரு வகையில் இது முட்டாள்தனமான செயல்.இன்னோரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது.
ஆசிரியர் குறிப்பு
நாவலை எழுதியதன் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி உணர முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.
– எஸ்.ராமகிருஷ்ணன்
கதை சுருக்கம்
ஒரு மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின், அந்த தந்தை எந்த அளவு பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்க வேண்டும். வருமானம் ஈட்டாமல் இருந்தர்க்காகவோ, பொறுப்பற்று திரியும் தந்தையை பார்த்தோ இந்த கேள்வி எழ வாய்ப்பில்லை. நிச்சயம் ஒரு துரோகத்தை அல்லது சமுதாயத்தால் துரோகம் என்று கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவர் செய்திருப்பின் இது நடந்திருக்கும் .
ஆம் இது ரஷ்ய எழுத்தாளர் மேதை லியோ டால்ஸ்டோய் அவரது வாழ்கையின் ஒரு பகுதி.
தனது 35 வயது வரை புகை, கொண்டாட்டம், மது மாது என்று ஊதாரியாகவே வாழ்ந்துவந்தார் டால்ஸ்டோய். எழுத்து இலக்கியம் எல்லாம் ஒருபுறம் சென்றுகொண்டிருந்தாலும், தனது கொண்டாட்டங்களை ஒரு போதும் அவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. பெண்கள் விஷயத்திலும், தான் விரும்பும் பெண்களை அவரது விருப்பதோடு ஆட்கொள்வதையும் பழக்கமாக்கிக்கொண்டார். அப்படியாக வந்த ஒருத்தி , மற்ற பெண்களைக்காட்டிலும் அதிக கவர்ச்சியான அதேசமயம் மிகவும் அன்பான பெண்ணாக இருந்தாள்.
டால்ஸ்டாய் அவரது வாழ்வில் எத்தனையோ பெண்களைக் கடந்திருந்தாலும் அனைவரையும் நினைவில் வைத்துகொள்ளவில்லை. ஆனால் இது அவரை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்தியது. எஜமான் தம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று தெரிந்தும் அவரது குழந்தையை வாங்கிக்கொண்டு அவரது பண்ணையிலேயே வேலை செய்கிறாள். பின்பொறுநாள் அந்த குழந்தைக்கு தான் யாருடைய பிள்ளை என்று தெரியவருகிறது. அதற்கு பிற்ப்பாடு நடந்த சம்பவங்களை கிடைத்த தரவுகளைக்கொண்டு கொஞ்சமாக புனைந்து கொஞ்சமும் சலிபூட்டாமல் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஆசிரியர் . டால்ஸ்டாய் அவர்களின் கொள்கைகள், அரசுக்கு எதிரான அவருடைய போராட்டங்கள் நடவடிக்கைகள் எல்லாமே ஆங்காங்கே கூறிவிடவும் தவறவில்லை.
அவருடைய மனைவியைத் திருமணம் செய்து தனது பண்ணைக்கு அழைத்துவந்து, மொத்த நிர்வாகத்தையும் அவளை நிர்வகிக்க விட்டு விட்டு தனது எழுத்தை மட்டுமே கட்டிக்கொள்ளக் கூடிய கொடுப்பினை இன்றளவும் எத்தனை பேருக்கு எட்டாக் கனியாக இருக்கிறது . தனது 13 குழந்தைகளையும் பெற்று வளர்த்து, பண்ணைகளையும் நிர்வகித்து, கணவனுக்கும் உறுதுணையாக நிற்கும் முதல் மனைவியாகட்டும், முழுக்க முழுக்க காதலுக்காக ஒரு குழந்தையையே சுமந்து, இம்மியளவு அவருடைய பெயருக்கு களங்கம் வராமல் வேலையாளாக வாழ்ந்து வந்த அவருடைய மறைக்காதலி ஆகட்டும், பெண்களின் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்ததாக்க உருவாக்கப்ப்ட்டுள்ளது.
சில சிறப்பான வரிகள்
* இயற்க்கை கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை.
* காலம்தான் மனிதர்களின் பிரச்சனை.அவர்களால் நிகழ்காலத்தில் மட்டும் வாழமுடியாது.
* ரகசியங்கள் இல்லாத மனிதர்கள் யார்? எத்தனையோ ரகசியங்களை மனிதன் இறக்கும்போது கூடவே புதைந்து போய்விடுகின்றன.
* சந்தோஷம் என்பதை எதை வைத்து முடிவு செய்வது.எல்லா சந்தோஷங்களும் மழை போலத்தானே எவ்வளவு நேரம் மழை தொடர்ந்து பெய்யமுடியும்.மழை நின்றவுடன் வெறுமை கவிழ்ந்துவிடுகிறதே.
* சொர்க்கம் நிச்சயம் வானில் இருக்கமுடியாது.அது மனிதனின் மனதிற்குள் இருக்கிறது.மனித மனமே சொர்க்கத்தின் நுழைவாயில்.
* ஒருவன் மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மையை சொல்லிக் கொள்ளத்தானே வேண்டும்.
* கலையின் வேலை மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை.நெறிப்படுத்துவதும் வழிகாட்டுவதும் மேம்படுத்துவதும் அதன் வேலைகள்.
* மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக்குறைவான நேரத்தையே தனக்காகச் செலவு செய்கிறார்கள்.பெரும்பகுதி வாழ்க்கை அடுத்தவர்களுக்கானது.வேலைக்கானது.சம்பாத்தியத்திற்கானது.ஒரு வகையில் இது முட்டாள்தனமான செயல்.இன்னோரு வகையில் மனிதனின் வாழ்க்கை இதனால்தான் அர்த்தமுள்ளதாகிறது.
* பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி அடைந்தாலும் அதற்கு முழு ஆகாசமும் தேவைப்படுகிறது.அப்படிதான் மனிதனும்.இந்த மொத்த நிலமும் தனக்கே வேண்டும் என ஒருவன் ஆசைப்படுவதில் தவறு ஒன்றுமில்லை.
* பெண்கள் விஷயத்தில் எல்லாமும் தலைகீழ்தான்.அவர்கள் ஏமாற்றியவனையும் மன்னிப்பார்கள்.அவனுக்காக உருகுவார்கள்.பிரார்த்தனை செய்வார்கள்.தெய்வமாக எண்ணி வணங்குவார்கள்.தன்னைத் தியாகம் செய்துகொள்வது பெண்களுக்குப் பிடித்தமானது.
Download Link 1 : Mandiyidungal Thandhaiye