How to monetize your blog using Google Adsense?
இணைய உலகின் ஜாம்பவான்களில் ஒன்றான Google தன்னுடைய “Google Adsense” மூலமாக digital advertising துறையிலும் கால்பதித்துள்ளது. இணையதளங்களை வைத்திருப்போர் Google Adsense இல் account ஐ திறந்து தங்களது இணையதளத்தில் விளம்பரங்களை காட்டிடலாம்.
தற்போது Adsense தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி .
இதற்க்கு முதலில் https://www.google.com/adsense/signup இந்த லிங்கை கிளிக் செய்து ‘Signup’ செய்துகொள்ளுங்கள்.
URL of your site இல் உங்களது இணையதளத்தின் URL ஐ பதிவிடுங்கள்.
Your Email Address இல் உங்களது மின்னஞ்சல் (Email) முகவரியை பதிவிடுங்கள்.
Get helpful adsense info at that email address – Google Adsense அனுப்பக்கூடிய தகவல்களை உங்களது மின்னஞ்சலில் பெற விரும்பினால் “Yes” ஐ கிளிக் செய்திடுங்கள்.
வேண்டாம் என விரும்பினால் “No” வை கிளிக் செய்திடுங்கள்.
Save & Continue ஐ கிளிக் செய்திடுங்கள்
அடுத்தடுத்து வரக்கூடியவற்றை பூர்த்தி செய்து போனால் உங்களுக்கு adsense account தரப்படும்.
பிறகு அதனுள் நுழைந்து உங்கள் இணையதளத்திற்கு எந்த layout (அளவு) இல் Ad (விளம்பரம்) வேண்டுமோ அதனை தேர்தெடுத்து Adcode ஐ உருவாக்கிட வேண்டும். பிறகு அதனை உங்களது இணையதளத்தில் இட்டால் adsense மூலமாக உங்களது இணையதளத்தில் விளம்பரம் காட்டப்படும். அதற்க்கு ஏற்றவாறு உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
Advantage of Google Adsense :
Easy to Use |பயன்படுத்திட எளிமையானது
மற்ற provider களை விட அனைவரும் மிக எளிமையாக பயன்டுத்திட சிறந்தது adsense. புதிதாக செல்பவர்களுக்கு போதுமான தகவல்கள் வழங்கப்படுவதால் எளிமையாக இருக்கும்.
Responsive Ad Unit Option
இதில் நீங்கள் தனியாக ஒவ்வொரு Layout க்கும் Ad ஐ create செய்திட வேண்டும் என்பது கூட இல்லை. “Responsive Ad Unit ஆப்சனை கிளிக் செய்து பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தினால் உங்களது இணையத்தளத்திற்க்கான தகுந்த அளவுள்ள Ad களை கூகுளே வழங்கும்.
Free to Use | முற்றிலும் இலவசமானது
பெரும்பாலான தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்கிடும் கூகுள் நிறுவனம் adsense ஐ இலவசமாகவே வழங்குகிறது. நீங்கள் இணையதளமோ அல்லது Blog வைத்திருந்தால் கூட உங்களால் adsense இல் இணைந்து சம்பாரிக்க முடியும்.
Multiple websites under one adsense account
ஒரு adsense அக்கவுண்ட்க்கு கீழே நீங்கள் எத்தனை இணையதளங்களை வேண்டுமானாலும் இணைத்து நிர்வகிக்க முடியும். இதனால் எளிதில் விரைவாக உங்களால் பணம் ஈட்ட முடியும்.
Pingback:How to Monetize Your Blogs – பாமரன் கருத்து