How to choose a best web hosting provider | சிறந்த ஹோஸ்டிங்கை தேர்ந்தெடுப்பது எப்படி?

புதிதாக இணையதளம் அல்லது பிளாக் ஆரம்பிப்பவர்கள் டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) இந்த இரண்டையும் சற்று குழப்பி கொள்வார்கள்.

Domain is a URL for your website, Hosing is the place where you have stored your content of your site

டொமைன் (Domain) என்பது உங்கள் இணையதளத்திற்க்கான முகவரியை (URL) பதிவு செய்து வாங்குவது மட்டுமே.

ஹோஸ்டிங் (Hosting) என்பது உங்கள் இணையதளம் இயங்க தேவையான பைல்களை (Content of your site like images,videos,files,notes etc) வைத்திருக்க வாங்க வேண்டிய இடம். உதாரணத்திற்கு உங்கள் இணையதளத்தில் ஒரு பதிவை இட வேண்டும் என்றால் அதற்க்கு TEXT பைல் வேண்டும் போட்டோ (Image) வேண்டும் அல்லவா. இந்த இரண்டையும் ஏதோ ஒரு இடத்தில் வைத்திருந்தால் தானே அதனை மற்றவர்களால் பார்க்க முடியும். அதனை தான் ஹோஸ்டிங் place என்கிறோம் .

 

பெரும்பாலும் டொமைன் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்துமே ஹோஸ்டிங் சேவையையும் வழங்குகின்றன. டொமைன் மற்றும் ஹோஸ்டிங் இந்த இரண்டையும் ஒரே கம்பெனியில் இருந்து தான் வாங்க வேண்டும் என கட்டாயம் இல்லை.

நீங்கள் டொமைனை ஒருவரிடமிருந்தும் ஹோஸ்டிங் செய்வதற்கான இடத்தை இன்னொருவரிடம் இருந்தும் வாங்கி கொள்ள முடியும். அப்படி வாங்கும் போது உங்களது ஹோஸ்டிங் சேவை வழங்குவோர் தரும் தகவல்களை டொமைன் வாங்கியிருக்கும் இடத்தில் போட்டுவிட்டால் போதுமானது இந்த இரண்டும் இணைந்துவிடும்.

நீங்கள் டொமைன் & ஹோஸ்டிங் இரண்டையும் ஒரே இடத்தில் வாங்குவது சிறந்தது.

 

நீங்கள் ஹோஸ்டிங் இடம் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது,

 

  •  ஹோஸ்டிங் புரொவைடர் 24/7 சப்போர்ட் கொண்டிருக்கிறதா என பாருங்கள்

 

  •  ஒரு சில ஹோஸ்டிங் புரொவைடர்களில் நமது தகவல்களை இழக்க வாய்ப்புள்ளது அந்த அளவிற்கு சில ஹோஸ்டிங் புரொவைடர்கள் சரியாக இல்லாமல் இருப்பார்கள். அவர்களிடம் குறைந்த விலை ஆனாலும் வாங்க கூடாது.

 

  • அடுத்த ஆண்டுகளுக்கு renewal செய்யும்போது விலை எப்படி இருக்கும் என்பதனை பார்த்து அதற்கேற்றவாறு ஹோஸ்டிங் புரொவைடரை தேர்ந்தெடுங்கள். சிலர் முதலாம் ஆண்டு குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டு பிறகு அதிக விலை கேட்பார்கள்.

 

  •  ஆரம்ப கட்டத்தில் அன்லிமிடெட் இடம் வாங்குவதை தவிர்க்கலாம்

 

  •  முன்னனி ஹோஸ்டிங் புரொவைடர்களின் ஆபர்களை பற்றி தெரிந்துகொண்டு குறைந்த விலையில் வழங்குகிற இடத்தில் வாங்கிக்கொடுங்கள்.

இவை இந்தியாவில் தற்போது இருக்க கூடிய சில ஹோஸ்டிங் புரொவைடர்கள்

 

> Godaddy

> HostSoch

> BigRock

> Globe Host

> Hostinger India

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *