ஓரினசேர்க்கைக்கு அனுமதி 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உச்சநீதிமன்றம் தீர்ப்பு 1 :<[sg_popup id="3271" event="inherit"][/sg_popup]/h4>
ஓரினசேர்க்கை – குற்றமாகாது
உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இந்த இரண்டு தீர்ப்புகளுமே மிக முக்கியதுவம் வாய்ந்த வரவேற்ப்புக்கு உரிய தீர்ப்புகளாகவே பார்க்கின்றேன் .
குறிப்பாக ஓரினசேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ள தீர்ப்பில் “தனி மனிதனுடைய சுதந்திரத்தை கொடுக்க மறுப்பது , மரணத்தை கொடுப்பதற்கு ஒப்பாகும் ” என குறிப்பிட்டுள்ளது கவனிக்கப்படவேண்டியது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே தனி மனித சுதந்திரம் தான் என்பதனை இந்த தீர்ப்பு வலிமையாக வலியுறுத்துகின்றது .
இனி ஓரினசேர்க்கையில் ஈடுபடுங்கள் என இந்த தீர்ப்பு கூறவில்லை , மாறாக அப்படி ஈடுபடுவதற்கு தனி மனிதர்களுக்கு உரிமை இருக்கிறதென்றும் அது குற்றமல்ல எனவும் வலியுறுத்துகின்றது .
உச்சநீதிமன்றம் தீர்ப்பு 2 :
ராஜீவ் காந்தி குற்றவாளிகளான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் உண்டு
இதுவரை இவர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லாதபட்சத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் கிடக்கிறார்கள் 7 பேர் . முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவர்களை விடுவிக்க முயன்றபோது எதிராக நிலைப்பாடு எடுத்தது மத்திய அரசு . குற்றவாளிகளை விடுக்க தங்களுடைய அனுமதியும் வேண்டுமென வழக்கு தொடர்ந்தது மத்திய அரசு .
தற்போது உச்சநீதிமன்றமே தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கின்றதென்று அறிவித்துள்ளபடியால் இனி தமிழக அரசே முடிவெடுத்து அவர்களை விடுக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் .
Pamaran Karuthu
ஓரினசேர்க்கை – குற்றமாகாது
உச்சநீதிமன்றம் தீர்ப்பு 2 :
ராஜீவ் காந்தி குற்றவாளிகளான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் உண்டு
25 வருடங்களாக குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் அடைத்ததற்கு என்ன தண்டணை?
குற்றம் நிரூபிக்கப்படவில்லையெனில் உச்சநீதிமன்றமே அவர்களை விடுதலை செய்யாமல் ஏன் தமிழக அரசே விடுதலை செய்யலாம் எனக் கூறுகிறார்கள்??
குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறிட முடியாது, அதற்க்கான விவாதங்கள் இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. பல குளறுபடியான விசயங்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த வழக்கு.
இது குற்ற வழக்கு அல்ல, குறிப்பிட்ட ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு. அதன் அடிப்படையில் இவர்களையும் விடுவிக்க முயன்றபோது இந்த வழக்கில் சிபிஐக்கும் மத்திய அரசிற்கும் தொடர்பு இருக்கிறபடியால் மத்திய அரசின் அனுமதியின்றி தமிழக அரசு தானாக விடுவிக்க முடியாது என தொடரப்பட்ட வழக்கு தான் இது. உச்சநீதிமன்றம் விடுவிக்க முடியாது.
இப்போது வந்துள்ள தீர்ப்பால் தமிழக அரசு இனி இவர்களை விடுதலை செய்யலாம்.
Pingback:vioglichfu.7m.plindex.php?n=25