உச்சநீதிமன்றம் தீர்ப்பு 1 :
ஓரினசேர்க்கை – குற்றமாகாது
உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இந்த இரண்டு தீர்ப்புகளுமே மிக முக்கியதுவம் வாய்ந்த வரவேற்ப்புக்கு உரிய தீர்ப்புகளாகவே பார்க்கின்றேன் .
குறிப்பாக ஓரினசேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ள தீர்ப்பில் “தனி மனிதனுடைய சுதந்திரத்தை கொடுக்க மறுப்பது , மரணத்தை கொடுப்பதற்கு ஒப்பாகும் ” என குறிப்பிட்டுள்ளது கவனிக்கப்படவேண்டியது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே தனி மனித சுதந்திரம் தான் என்பதனை இந்த தீர்ப்பு வலிமையாக வலியுறுத்துகின்றது .
இனி ஓரினசேர்க்கையில் ஈடுபடுங்கள் என இந்த தீர்ப்பு கூறவில்லை , மாறாக அப்படி ஈடுபடுவதற்கு தனி மனிதர்களுக்கு உரிமை இருக்கிறதென்றும் அது குற்றமல்ல எனவும் வலியுறுத்துகின்றது .
உச்சநீதிமன்றம் தீர்ப்பு 2 :
ராஜீவ் காந்தி குற்றவாளிகளான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் உண்டு
இதுவரை இவர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லாதபட்சத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் கிடக்கிறார்கள் 7 பேர் . முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவர்களை விடுவிக்க முயன்றபோது எதிராக நிலைப்பாடு எடுத்தது மத்திய அரசு . குற்றவாளிகளை விடுக்க தங்களுடைய அனுமதியும் வேண்டுமென வழக்கு தொடர்ந்தது மத்திய அரசு .
தற்போது உச்சநீதிமன்றமே தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கின்றதென்று அறிவித்துள்ளபடியால் இனி தமிழக அரசே முடிவெடுத்து அவர்களை விடுக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் .
Pamaran Karuthu