பெண்களுக்கு சொத்து உரிமை – மீண்டும் நிறுவப்பட்ட பெண்ணுரிமை

சட்டம் நிறைவேற்றப்படும் முன்னரே சொத்தின் உரிமையாளரான அப்பா இறந்துவிட்டாலும் கூட மகள்களுக்கு அந்த சொத்தின் மீது உரிமை கோர தகுதி இருக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

 

மகன்களைப்போலவே மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை இருக்கிறது என தமிழகத்தில் 1989 ஆம் வருடமே சட்டம் இயற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் தான் மத்திய அரசால் இந்தியா முழுமைக்குமே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கூட திருமணம் செய்துகொண்ட மகள்கள் சொத்தில் பங்கு கேட்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாக இருந்தது. ஆனாலும் சில குடும்பங்களில் பெண்கள் தங்களது தந்தையின் சொத்தில் சம உரிமை கேட்ட நிகழ்வுகளும் உண்டு. அப்படி கேட்கும் பெண்களுக்கு சிலர் சொத்துக்களை வழங்க மனம் வராமல் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதாவது, இந்த சட்டம் 2005 ஆம் ஆண்டு தான் நிறைவேற்றப்பட்டது. ஆகவே அதற்கு முன்னதாக பிறந்த பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை எனவும் 2005 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட போது சொத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லை ஆகவே மகளால் உரிமை கோர இயலாது எனவும் சிலர் கூறினார்கள். இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. 

பெண்களுக்கு சொத்து உரிமை

சமைக்கும் பெண்

 

உச்சநீதிமன்றம் இந்த பிரச்சனைகள் தொடர்பாக மிகத்தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது. அதன்படி, 2005 ஆம் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சொத்தின் உரிமையாளரான அப்பா உயிருடன் இல்லை என்றாலும் கூட மகளுக்கு மகனைப்போலவே சொத்தில் சம பங்கு உண்டு. அதேபோல 2005 க்கு முந்தைய காலகட்டத்துக்கும் இந்த சட்டம் பொருந்தும் என தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பு ஒரு விசயத்தை மிகத்தெளிவாக்கி இருக்கிறது. மகன்களுக்கு நிகரானவர் மகள் என்றும் மகனுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் மகளுக்கும் இருக்கிறது என கூறியிருக்கிறது.

 

நீதிபதி குறிப்பிட்ட வார்த்தைகள்

Parenting tips teach with love

நீதிபதி மிஸ்ரா இந்த தீர்ப்பை வாசிக்கும் போது மகள் குறித்தான தனது கருத்தையும் குறிப்பிட்டார். “A son is a son till he takes him a wife, a daughter is a daughter all of her life.” “Daughters must be given equal rights as sons. A daughter remains a loving daughter throughout life. The daughter shall remain a coparcener throughout life, irrespective of whether her father is alive or not,” அயர்லாந்தில் ஒரு பிரபல வாசகம் உண்டு “திருமணம் முடிந்து மனைவி வரும் வரைக்கும் தான் மகன் மகனாக இருப்பார். ஆனால் மகள் தனது இறுதிக்காலம் வரைக்கும் மகளாகவே இருப்பார்” மகன்களுக்கு கொடுக்கப்படுகின்ற அனைத்து உரிமைகளையும் மகள்களுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம். மகள்கள் எப்போதும் அன்புக்கு உரியவர்கள். அப்படிப்பட்ட மகள்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று என குறிப்பிட்டு இருந்தார். 



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *