ஏழாவதுஅறிவு (மூன்று பாகங்கள்) | வெ.இறையன்புவின் வாசித்தே ஆக வேண்டிய புத்தகம்

தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சமூகத்தையும் எதிர்கால சந்ததிகளையும் ஊக்குவிப்பதற்காகவே பயன்படுத்துகிறவர்கள் வெகு சொற்பம். அதிலே ஒருவர் தான் “இறையன்பு ஐஏஎஸ்”. அவரது நேர்மையான செயல்பாடு பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. கூடுதலாக, தன்னுடைய சொந்த அனுபவங்கள், தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள், மனிதர்கள் போன்றோரை வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். அந்த வகையில், அவர் வானொலியில் பேசிய பல கட்டுரைகளின் தொகுப்பை “ஏழாவது அறிவு” என்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.


இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் ஏழாவது அறிவு புத்தகம் மூன்று பாகங்களை கொண்டது. மூன்று பாகங்களும் தனித்தனியேயும் விற்பனைக்கு கிடைக்கிறது. மூன்று பாகங்களையும் ஒரே புத்தகமாகவும் வாங்கி படிக்கவும் முடியும். அதற்கான அமேசான் தள இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கிளிக் செய்து விலையினை தெரிந்துகொள்ளலாம். இங்கே மூன்று பாகங்களின் தனித்தனி அறிமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் படித்துவிட்டு புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இளையோர் இருக்கக்கூடிய வீட்டில் இருக்க வேண்டிய நல்ல புத்தகம்.


ஏழாவது அறிவு முதல் பாகம்

புத்தகத்தின் பெயர்: ஏழாவது அறிவு முதல் பாகம்

ஆசிரியர்: இறையன்பு

விலை: ரூ 115

 

இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் சென்னை வானொலியில் “இன்று பிறப்போம் புதிதாய்” எனும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது உரையாற்றியதை தொகுத்து ஒரு நூலாக தந்துள்ளார். பேசும்போது மட்டுமல்லாமல் எழுதும்போதும் அதன் சுவை குறையாமல் கருத்து குன்றாமல் படிப்போரை இன்னொரு படி மேலே அழைத்துச்செல்லும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரையையும் தந்துள்ளார் ஆசிரியர்.


 நீங்கள் இந்த புத்தகத்தில் படிக்கும் ஒவ்வொரு கட்டுரையும் பயனுள்ளவை; சுவையானவை; சிந்திக்க வைப்பவை; செயல்படத் தூண்டுபவை; இவையே இப்புத்தகத்தின் கனம்.

 

கட்டுரைகளோடு, தான் படித்த பயன்பெற்ற நூல்களின் பட்டியலையும் வாசகர்களின் நலன் கருதி இந்த நூலின் இறுதியில் இணைத்துள்ளார் இறையன்பு அவர்கள். இந்தப் புத்தகத்தில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன. 

 

1.பிரதிபலித்தலும் பின்பற்றுதலும்

2. சோளக்காட்டு பொம்மை

3. வெகுளியும் தந்திரமும்

4. உண்மை துறவி

5. எதிர்மறைச் சிந்தனை

6. இன்று புதிதாய் பிறந்தோம்

7. குற்றத்தை ஏற்பேன்

8. பங்காளிகளும் சகோதரத்துவமும்

9. பறவைகள் சில தகவல்கள்

10. ஹைக்கூ

11. அருவியும் குருவியும்

12. பொன்னை வைக்கும் இடத்தில்

13. சினம்

14. காக்கை சிறகினிலே

15. தர்மம்

16. உபதேசம்

17. தேசம்

18. வழிப்போக்கர்கள் திராட்சையும்

19. வரமும் சாபமும்

20 சிற்பத்தில் இல்லை சிற்பியின் கையொப்பம்

21 சுயம்

22. பிரார்த்தனைகள்

23. விலங்கு

24. பிரதிபலித்தல் கலை

25. ஒவ்வொரு ஜனனமும் மரணமே

26. அடையாளம்

27. வாழ்க்கை 

28 துளையுள்ள மூங்கில் 

29. கற்பனை 

29.வழிபாடு நேரம் அல்ல சுய விடுதலை 

30.முழுமையும் வெறுமையும் 

31பிம்பம் 

32கல்லும் கருவறையும்,  ஓவியன், பயம், ஊக்கம், நகைச்சுவை, பட்டாம்பூச்சி, ஒரு நிமிடம் போதும், புகழ், பிரபஞ்சம், பறவை, சுதந்திரம், இறைவன் இறந்து விட்டான், குளிர் நிலவும் எரிந்த கூரையும், கண்ணுக்குத் தெரியாத கைகள், 9 ஆக இருக்கட்டும், ஊட்டுவதாக இல்லாமல், ஈசா உபநிடதம், வள்ளலார், ஒரு நாள் 24 மணி நேரம் அல்ல, யாரை பின்பற்றுவது கொடுப்பது, சமயோசித புத்தியும் வாழும் தருணமும், வன்முறை, வழிகாட்டுதல், அழகும் அவலட்சணமும் அன்பே அருமருந்து, நன்றி, ழ, மரங்கள் மண்ணின் வரங்கள், பதற்றம், சப்தங்கள், பொய்யா விளக்கே விளக்கு, மனிதனில் இருக்கும் குரங்கு, சிறுதானியங்கள் உண்மையான ஆற்றல், இரண்டு கண்ணாடிகள், நீரும் நெருப்பும், ஏழாவது அறிவு.

ஏழாவது அறிவு இரண்டாம் பாகம்


நூலின் பெயர்:ஏழாவது அறிவு இரண்டாம் பாகம்

நூலாசிரியர்:வெ.இறையன்பு

மொத்த பக்கங்கள்:224

 

இறையன்பு அவர்கள் மதுரை வானொலியில் ‘இறையன்பு நேரம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரைகளில் 75 தலைப்புகளை ஏழாவது அறிவு (இரண்டாம் பாகம்) என்னும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. வாசிக்கவேண்டிய அருமையான தமிழ் புத்தகம். 

 

ஹெக்டேர் மடிந்த வரலாறு ஹோமரின் “இலியட்டிலும்,இபிகஸ் கொக்குகள் கதையும்,ஷேக்ஸ்பியர்,பாடகன் ஒர்ஃபியஸ்,நாகேஷ்பட்டர்,என பலரின் வரலாறுகளையும் கூறுகிறார்.

 

இந்த புத்தகத்தில் இருக்கும் சில சிறப்பான வரிகள் : 

 

” காலிக்குடங்கள் கதகளி ஆடும்போது நிறைந்த குடங்கள் நிஷ்டையில் இருக்கின்றன.”

 

“வைராக்கியம் என்பது உயர்ந்தலட்சியங்களுக்காக வாழ்வது.குஞ்சு முட்டையை உடைத்து வெளிவருவது போல ஆக்கப்பூர்வமானது.பிடிவாதம் என்பது முட்டையை உடைத்து ஆம்லெட் போடுவதைப் போல சாதரணமானது..

 

” குழந்தைகளைப் போராடும் மனநிலையோடு நாம் வளர்க்க வேண்டும்.மிகவும் பணிவோடு வளர்க்கப்படுகின்ற குழந்தைகளுக்குப் போராட தெரியாது.”

 

“நாம் இருக்கும்வரை உணராத பொருட்களின் பட்டியல் நீளுகின்றது.இல்லாத்தற்கு ஏங்கியும்,இருப்பதை எட்டி உதைத்தும் பழக்கப்பட்டவர்கள் நாம்”

 

” நிராகரிக்கப்படுபவர்கள் எல்லாம் நிராயுதபாணிகள் அல்லர்.அவர்களே நிற்கக் கூடியவர்கள்,நிமிரக் கூடியவர்கள்,நிலைக்கக் கூடியவர்கள்”

அரிய கருத்துகளை உள்ளடக்கி நகைச்சுவை சம்பவங்களை சேர்த்து நடைமுறை வரலாறு,புராண நிகழ்ச்சிகளைச் சான்று காட்டியிருப்பது சிறப்பு.

ஏழாவது அறிவு பாகம் 3


நூலின் பெயர்: ஏழாவது அறிவு பாகம் 3

எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.

பக்கங்கள் :215

 

அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது.

 

ஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

ஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *