“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

மொழி பெயர்ப்பு அரங்குகளில் ஆன்டன் செகாவ் என்ற ரஷ்ய எழுத்தாளரின் பெயரை நீங்கள் அதிகம் கண்டிருக்கலாம். உலகமே வியந்து கொண்டாடும் செகாவ்வின் வாழ்க்கையை வாசகர்கள் அறிந்துகொள்ள அற்புதமாக எழுதப்பட்டுள்ள புத்தகம் தான் “செகாவ் வாழ்கிறார்”.

 

புத்தகம் : செகாவ் வாழ்கிறார்

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் 

விலை : ரூ 150


 

தன்னுடைய இயல்பான எழுத்துக்களால் வாசிப்பாளர்களால் நித்தமும் கொண்டாடப்படுகிறவர் ஆண்டன் செகாவ். இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் செகாவ் குறித்து ஆற்றிய உரைகளை கேட்கிறபோது மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அதனை நினைத்து எள்ளளவும் கவலைப்படாமல் அடுத்தகட்டத்துக்கு நம்பிக்கையோடு நகரும் செகாவ் ஒரு வாழ்வியல் போராளியாக செகாவ் இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது. 

 

ஆன்டன் செகாவ் இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடினார் .கஷ்டப்பட்டு தான் பள்ளிப்படிப்பை முடித்தார். உடல்நலம் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதும் அவர் விடா முயற்சியாக வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் விற்றுவிட்டு படித்தார் .கடன் சுமையால் தந்தை ஊரை விட்டு ஓடிவிட்டார். இந்த நிலையிலும் தனது 19 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக கல்வி பயின்றார். தனது பதின்மூன்றாவது வயதிலேயே உள்ளூர் வேசியின் மூலம் உடலுறவின் சுகத்தை அறிந்திருந்த செகாவ்  அழகான பெண்களை தேடி பழகத் தொடங்கினார். அவர் தனது வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை கண்டபோதும் “நிச்சயம் புது வாழ்க்கை தொடங்க போகிறது” என்று அவருக்குள்ளே கேட்கும் ஒலி அவரை நகர்த்திக்கொண்டு போனது.


 

“செகாவ் வாழ்கிறார்” என்ற புத்தகத்தில் பின்வரும் 13 தலைப்புகளின் கீழாக செகாவ் வாழ்க்கையின் துவக்கம் முதல் இறுதிக்காலம் வரைக்கும் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன். இந்தப் புத்தகத்தை வாசித்த பலரும் படிக்க படிக்க நேரம் போவதே தெரியவில்லை என குறிப்பிட்டுளார்கள். 

 

1)என் பெயர் செகாவ்

2) ஐந்து  ரூபிள் காதலி 

3)தண்டனை தீவு 

4)காலாரா காலத்தில் செகாவ்

 5) செர்ரி தோட்டங்கள் அழிவதில்லை

6) டால்ஸ்டாயும் செகாவும் 

7) செகாவின் காதலிகள்

8) செகாவின் தோழர்கள் 

9) செகாவின் கடைசி தினங்கள் 

10) செகாவின் கதையுலகம்

11)கார்வரும் செகாவும்

12)திரையில் ஒளிர்ந்த செகாவ்

13) செகாவ் சில விமர்சனங்கள் 

 

“செகாவ் போல பலவேறு வகையாக கதாபாத்திரங்களை உருவாக்கியவர் எவருமில்லை. மன உணர்ச்சிகளை துல்லியமாக எழுதியது அவரது தனிச்சிறப்பு .அவரின் எழுத்து மிகவும் யதார்த்தமானது .அலங்கார மொழியை ஒருபோதும் அவர் பயன்படுத்தியது இல்லை” என்று எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

நூலில் இருந்து….

 

டால்ஸ்டாயும் செகாவும் ………

 

செகாவ் விட டால்ஸ்டாயை விடவும் 32 வயது அதிகமானவர். செகாவ் எழுதியது போல மூன்று மடங்கு டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் .டால்ஸ்டாய் தனது சொந்த மகனை போல செகாவை நேசித்தார். ஒருமுறை இருவரும் இரவு நடைப்பயிற்சிக்கு சென்றார்கள் .நீண்ட நேர நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் போது டால்ஸ்டாய் இவ்வாறு கூறுகிறார் : “பசியை விடவும்  காம உணர்ச்சியே வலுவானது. பெண்களின் காம உணர்வுகள் குறித்து வெளிப்படையாக பேச முற்படுவது இல்லை .காமம் இருட்டை போன்றது ;அதை ஊடுருவி போக முடியும் ,ஆனால் புரிந்து கொள்வது எளிது அல்ல .

 

இரண்டு தலை உள்ள புழுவை போன்றது காமம் ; ஒரு பக்கம் ஆசையாகவும் மறுபக்கம் விலகலாகவும் அது வெளிப்படுகிறது .காமத்தை மனிதர்கள் வெற்றி கொள்ள முடியாது .கடந்து போக மட்டுமே முடியும் .உண்மையில் காமம் ஒரு பொறி .அது மனிதர்களை பலப்படுத்துகிறது “என்று டால்ஸ்டாய் கூறினார் .

 

அதற்கு செகாவ் “நான் ஒரு மருத்துவராக காமத்தை அணுகும் விதம் வேறு; எழுத்தாளனாக அணுகும் விதம் வேறு. உண்மையில் காமம் ஒரு நோய் .அது உக்கிர படும்போது மனிதர்களின் இயல்பு திரிந்துவிடுகிறது .ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது காமத்தைத் தவிர ஒரு காரணம் இல்லை. காமம் இருக்கும் வரை அவர்கள் இணக்கமாக இருப்பார்கள் .அது வடிந்த பிறகு சண்டையும் கூச்சலும் ஏற்பட்டுவிடும” என்று செகாவு கூறுகிறார்.

 

நோபல் பரிசு பெற்ற இவான் புனின் 1895ஆம் ஆண்டு செகாவ்வை சந்திக்கிறார்;உற்ற நண்பராக மாறுகிறார். அவர் தான் செகாவ் இறந்த பிறகு அவரைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார்.


மேலும் நூல்கள் பற்றி படிக்க….

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *