கொரோனா தடுப்பு மருந்து பார்முலாவை இந்தியா போன்ற நாடுகளுக்கு கொடுக்க கூடாது : பில்கேட்ஸ்
இந்தத்தலைப்பை படித்தவுடன் உங்களுக்கு ஆச்சர்யம் எழலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படியொரு வைரஸ் தாக்குதல் வருமென்று உலகை எச்சரிக்கை செய்த மனிதரா ‘கொரோனா தடுப்பு மருந்துக்கான பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது’ என சொன்னார் என உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உண்மை தான். என்ன நடந்தது?
அண்மையில் Sky News எனும் பிரிட்டஷ் பத்திரிகைக்கு பேட்டியளித்தார் உலக பணக்காரர் என அறியப்பட்டவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், அப்படி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் பார்முலாவை கொடுக்கலாமா என கேட்டபோது அவர் சற்றும் தயக்கமின்றி ‘கூடாது’ என பதிலளித்தார். அவர் அதற்கு பாதுகாப்பு காரணங்கள், தடுப்பு மருந்தின் தரம் குறித்த சந்தேகம் உள்ளிட்டவைகளை காரணமாக கூறினாலும் கூட பில்கேட்ஸ் இப்படி கருணையே இல்லாமல் கூறிவிட்டாரே என பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
பில்கேட்ஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வைரஸ் வருமென கணித்தது குறித்தே பலரும் சந்தேகங்களை கிளப்பி வருகிறார்கள். இவரது பங்களிப்போடு செயல்படும் நிறுவனமே ஆய்வகத்தில் இந்த கொரோனா வைரஸை தயாரித்து இருக்கலாம் என்றும் இன்று உலகம் முழுக்க தடுப்பு மருந்து தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் அதனை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயல்வதாகவும் அதனாலேயே வளரும் நாடுகளுக்கு பார்முலாவை வழங்க விருப்பமற்றவராக பில்கேட்ஸ் இருப்பதாகவும் கணிக்கிறார்கள். ஆனால் இப்படி கூறுகிறவர்களை முட்டாள்கள் என விமர்சித்து இருந்தார் பில்கேட்ஸ்.
முன்னனி கொரோனா தடுப்பு மருந்து நிறுவனமான ‘CureVac’ இல் கேட்ஸ் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சுமார் 40 மில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதன் மூலமாக இந்த அறக்கட்டளைக்கு மில்லியன் கணக்கில் வருமானம் வந்துகொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, சமூகத்தின் மீது பெரிய அக்கறை கொண்டவராக அறியப்படுகிறவர் பில்கேட்ஸ். ஆனால் வளரும் நாடுகளுக்கு அவர் கொரோனா தடுப்பு மருந்தின் பார்முலாவை கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பது அவரது அபிமானிகளிடையே கூட எதிர்ப்பை அவருக்கு உண்டாக்கியுள்ளது. தரமுள்ள மருந்து தொழிற்சாலைகள் உள்ள நாடுகளுக்காவது கொடுக்கலாம் என அவர் சொல்லியிருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!