Adding Plugins in WordPress

WordPress  இன் சிறப்புகளில் ஒன்று Plugins. Plugins எனப்படுபவை, playstore இல் எப்படி மொபைல் போன்களுக்கு தனியாக ஒவ்வொன்றுக்கும் ஆப் இருக்கிறதோ அதைப்போலவே தான் WordPress இல் நீங்கள் ஒவ்வொன்றையும் செய்வதற்கு Plugins இருக்கிறது.

நீங்கள் இணையதளத்தில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்குமான Plugins இலவசமாகவே இங்கு கிடைக்கும். அப்படி இல்லையெனில் நீங்கள் விலை கொடுத்து கூட Plugins ஐ வாங்கி பயன்படுத்தலாம்.

 

உதாரணத்திற்கு நியூஸ்லெட்டர் அனுப்புவது, சமூக வலைதள பட்டன்களை இணைப்பது, Subscribe செய்வதற்கான பட்டனை இணைப்பது, youtube வீடீயோக்களை போஸ்டில் இணைப்பதற்கான plugin என பல plugin கள் இலவசமாக கிடைக்கின்றன.

 

 

நீங்கள் அங்கேயே Search செய்து தான் இன்ஸ்டால் செய்யவேண்டும் என்பதில்லை. வேறு இணையதளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கூட பயன்படுத்தலாம்.

 

குறிப்பு : நீங்கள் சில பயன்பாடுகளுக்காக ஒரு plugin ஐ டவுன்லோட் செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் அது இலவச plugin என்றால் முதலிலேயே அனைத்தும் செய்ய முடியுமா என பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சில plugin இல் குறிப்பிட்டவைகளுக்கு மேல் செய்யவேண்டுமெனில் நாம் பணம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் பணம் செலுத்த விரும்பாதபோது அதனை முதலிலேயே உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் பாதியில் மாற வேண்டி இருக்கும். அப்படி மாறும் போது சில தகவல்களை இழக்கவும் நேரிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *