PAN Card Fraud : உங்கள் பான் கார்டு மூலமாக அடுத்தவர்கள் லோன் வாங்கியிருந்தால் தெரிந்துகொள்வது எப்படி?
இப்போது உள்ள Loan App பல instant முறையில் லோன் வழங்குகின்றன. அவை ஆன்லைனில் தகவல்களை கொடுத்தால் உடனடியாக கடன் வழங்குகின்றன. சான்றிதழ் உண்மையா கொடுப்பவர் அவரது சான்றிதழைத்தான் கொடுக்கிறாரா என்பதையெல்லாம் சரி பார்ப்பதே இல்லை. சரியான விசாரிப்புகள் இல்லாமலேயே லோன் வழங்குவதால் அடுத்தவர்களின் பெயரில் லோன் எடுத்து ஏமாற்றுகிறார்கள்.
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், அடுத்தவர்களின் பான் கார்டு மூலமாக கடன் வாங்கும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. Dhani Loan App போன்ற ஆப்கள் சரியாக சரிபார்க்காமல் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்படும் தகவல்களைக் கொண்டு லோன் வழங்குகின்றன. இந்த மொபைல் ஆப் மீது அப்படி தவறாக லோன் பெற்றதாக வழக்குகள் உள்ளன. அப்படி, உங்களது PAN Card கொண்டு யாரேனும் உங்களுக்கு தெரியாமலே லோன் வாங்கியிருந்தால் என்ன செய்வது? எப்படி புகார் அளிப்பது? இந்தக் குற்றங்கள் எப்படி நடக்கின்றன?
PAN Card Fraud எப்படி நடைபெறுகிறது?
முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நாம் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர் உண்மையான நபரா, அவர் கொடுத்த சான்றிதழ்கள் உண்மையானவை தானா என்பதையெல்லாம் வங்கி அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரித்துவிட்டு தான் கடன் வழங்குவார்கள்.
ஆனால், இப்போது உள்ள Loan App பல instant முறையில் லோன் வழங்குகின்றன. அவை ஆன்லைனில் தகவல்களை கொடுத்தால் உடனடியாக கடன் வழங்குகின்றன. சான்றிதழ் உண்மையா கொடுப்பவர் அவரது சான்றிதழைத்தான் கொடுக்கிறாரா என்பதையெல்லாம் சரி பார்ப்பதே இல்லை. சரியான விசாரிப்புகள் இல்லாமலேயே லோன் வழங்குவதால் அடுத்தவர்களின் பெயரில் லோன் எடுத்து ஏமாற்றுகிறார்கள்.
நம்முடைய PAN Card தகவலை அடுத்தவர்கள் எப்படி பெறுகிறார்கள்?
நாம் பல சூழ்நிலைகளில் நம்முடைய PAN Card தகவல்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறோம். அப்படி சில சூழ்நிலைகளை உங்களுக்கு விளக்குகிறேன். இனிமேல் நீங்கள் அப்படி PAN Card தகவல்களை கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இவற்றை பகிர்கிறேன்.
> பலர் அலைபேசி எண் வாங்கும் போது PAN Card ஐ கொடுத்து வாங்குகிறோம். அப்படி பல சமயங்களில் நாம் கொடுப்பது யாரோ ஒரு மூன்றாம் நபரிடம் தான். அவரிடம் இருந்து நம்முடைய PAN Card தகவல்கள் கசிய அதிக வாய்ப்பு உண்டு.
> முன்பதிவு செய்யும் இடங்களில் நாம் கொடுக்கும் PAN Card தகவல்கள் கசிய வாய்ப்பு அதிகம் உண்டு.
> ஆன்லைன் மூலமாக PAN Card தகவல்களை பகிர்வதன் மூலமாகவும் கசிகிறது.
> ஜெராக்ஸ் கடைகளில் கொடுக்கும் போதும் கசிகிறது.
நம்முடைய பெயரில் Loan வாங்கிருந்தால் அதனை அறிவது எப்படி?
நம்முடைய பெயரில் லோன் வாங்கி இருந்தால் அதனை அறிய எளிமையான வழி Credit Score எடுத்து பார்ப்பது தான். நீங்கள் பல தளங்களில் Credit Score பார்க்க முடியும். அப்படி பார்க்கும்போது நீங்கள் உங்களது பான் கார்டை பயன்படுத்தி எங்கெல்லாம் கடன் வாங்கி உள்ளீர்களோ அந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதிலே நீங்கள் வாங்காத கடன் இருந்தால் புகார் அளிக்கலாம்.
உங்கள் பெயரில் போலியாக கடன் வாங்கி இருந்தால் எங்கே புகார் கொடுக்கலாம்?
1. குறிப்பிட்ட நிறுவனத்தில் புகார் கொடுக்கலாம்.
2. வருமான வரித்துறையில் புகார் அளிக்கலாம்.
3. CIBIL க்கு புகார் அளிக்கலாம். தவறாக தகவல் காட்டப்படுவதாக அங்கே புகார் கொடுக்கலாம்.
உங்களது PAN Card பயன்படுத்தி லோன் வாங்குவதை எப்படி தடுக்கலாம்?
சில வழிமுறைகளை நாம் கடைபிடித்தால் இதுபோன்ற குற்றங்களில் இருந்து தப்பிக்கலாம்.
-
அடையாள அட்டை வேண்டும் இடங்களில் PAN Card ஐ கொடுக்காமல் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கொடுக்கலாம்.
-
Agent போன்ற அறியாதவர்களிடம் PAN Card ஐ கொடுக்க வேண்டாம்.
-
எதாவது ஒரு இடத்தில் பான் கார்டு ஜெராக்ஸ் கொடுக்கிறீர்கள் என்றால் அதிலே எதற்காக கொடுக்கிறீர்கள் என்பதை எழுதி கொடுங்கள்.
இந்தபதிவை பிறருக்கும் பகிருங்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்