ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு செலுத்தும் பணம் வீணா? எடுக்கலாமா வேண்டாமா?Health Insurance

Health Insurance என்பது நீங்களும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியும் மேற்கொள்ளும் ஒப்பந்தம். அதற்கான பணத்தை நீங்கள் செலுத்திவிட்டால் உங்களுக்கு மருத்துவ குறைபாடு ஏற்படும் போது மருத்துவமனையில் ஆகும் செலவை அந்தக்கம்பெனி ஏற்கும். அறுவை சிகிச்சை துவங்கி உங்களுக்கு ஆகும் மருத்துவ செலவு, நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதற்கான செலவு என அனைத்தையும் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு தந்துவிடும். சாமானிய மக்கள் திடீரென ஏற்படும் பெரிய அளவிலான மருத்துவ செலவுகளை தவிர்ப்பதற்காக ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகிறார்கள்.

சரி, பணமெல்லாம் கட்டுகிறேன். ஆனால் எனக்கு ஏதும் மருத்துவ தேவை ஏற்படவில்லை எனில் Health Insurance க்கு கட்டிய பணம் முற்றிலும் வீண் தானே என கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிப்பட்ட கேள்வி உங்களுக்கு எழுந்தால் இந்தப்பதிவு உங்களுக்காகத்தான்.

இன்சூரன்ஸ் என்றாலே ஏமாற்றுவேலை என மக்கள் நினைக்கிறார்கள். அதற்கு முக்கியக்காரணம், இன்சூரன்ஸ் தொகையை மாதந்தோறும் நாம் செலுத்தினாலும் நமக்கு எதுவும் கிடைப்பது இல்லை. உதாரணத்திற்கு, பல ஆண்டுகளாக ஒருவர் தனது பைக் அல்லது காருக்கு பல ஆயிரம் ரூபாயை இன்சூரன்ஸ் தொகையாக கட்டியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் ஒருபோதும் விபத்தில் சிக்கியதே இல்லை என்றபட்சத்தில் அவர் இன்சூரன்ஸ் கட்டுவதனால் எந்தவித பயனும் இல்லை என்றே நினைக்கிறார். அதேசமயம், இன்னொருவர் இன்சூரன்ஸ் ஒரு ஆண்டுக்கு மட்டுமே செலுத்தி இருந்த தருணத்தில் பைக் அல்லது கார் தொலைந்து விடுகிறது. அவருக்கு பைக் அல்லது காருக்கான இழப்பீடு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். ஒருவேளை அவர் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்றால் மொத்தமும் இழப்பு தான். அவரை பொருத்தவரைக்கும் இன்சூரன்ஸ் ஒரு பயனுள்ள விசயம். இப்படித்தான் இன்சூரன்ஸ் பற்றிய நமது மனநிலை இருக்கிறது. 

இன்னும் சிலரோ, எனக்கு இப்போது தான் 25 வயதாகிறது. நான் மாதந்தோறும் கட்ட வேண்டிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை எனக்கு கணக்கில் சேமித்து வைத்துக்கொள்கிறோம். எனக்கு ஒருவேளை உடல்நடலக்குறைபாடு ஏற்பட்டால் எனது சேமிப்பில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்கிறேன். எனக்கு தேவை ஏற்படாவிட்டால் எனக்கு சேமிப்பு மிச்சம் தானே என்றும் விவாதிப்பார்கள்.


ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது அவரவர் விருப்பம். ஆனால், ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வாய்ப்பு இருந்தும் மேலே சொன்ன விவாதங்களால் அதை எடுக்காமல் இருப்பது ஆபத்தானது. மாதந்தோறும் சேமிப்பில் ஒருபகுதியை மருத்துவ தேவைக்காக சேமிக்கப்போகிறேன் என சொல்லுகிற பலர் அப்படி செய்திட வாய்ப்பே இல்லை. அதுபோலவே, நமக்கு மருத்துவ தேவை எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது. அது அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் வாதிடுவது போல மருத்துவ தேவை ஏற்படாமலே கூட போகலாம். ஆனால், ஏற்பட்டால் என்னாவது என்ற கேள்விக்கு பின்னால் தான் இன்சூரன்ஸ் தேவை இருக்கிறது. 

 

பலர் இப்படி நினைப்பதற்கு இரண்டு பெரிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது!

நாம் பணம் செலுத்தும் போது நமக்கு எதுவுமே உடனடியாக கிடைப்பது இல்லை . உதாரணத்திற்கு, ஒரு கடைக்கு சென்று 100 ரூபாய் கொடுக்கிறோம் எனில் ஒரு கிலோ ஆப்பிள் தருகிறார் எனில் அதில் மன திருப்தி கிடைக்கும். ஆனால் நாம் மாதம் தோறும் ப்ரீமியம் கட்டினாலும் நமக்கு மருத்துவ சேவை தேவைப்படாதவரை நமக்கு ஒன்றுமே கிடைப்பது இல்லை. இதுவொரு முக்கியக்காரணம்.

“எனக்கு எதுவும் நடக்காது” என்பதொரு மிகப்பெரிய காரணம். மக்கள் தங்களுக்கு பெரிய மருத்துவ தேவை தேவைப்பட போவது இல்லை என நம்புகிறார்கள். தங்களது குடும்பத்தில் உள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களுக்கு பெரிய மருத்துவ குறைபாடுகள் ஏற்படவில்லை என்பதனால் தங்களுக்கும் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என பலர் நம்புகிறார்கள். நமது முன்னோர்கள் வாழ்ந்த உலகில் நாம் தற்போது வாழவில்லை என்பதை பலரும் உணர மறுக்கிறார்கள். திடீரென பெரிய மருத்துவ தேவைகள் ஏற்படும் போது மிகப்பெரிய கடன் சுமையில் குடும்பம் சிக்கி தவிக்கிறது.

Health Insurance Advantages

1. செலவு இல்லாத மருத்துவ சிகிச்சை : Health Insurance இன் முக்கிய நன்மையே செலவு இல்லாத மருத்துவ சிகிச்சை தான். நீங்கள் எடுத்துள்ள பாலிசியை பொறுத்து உங்களுக்கு மருத்துவ செலவுக்கான பணம் அனைத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் கொடுக்கப்படும். 

 

2. வருமான வரிவிலக்கு : நீங்கள் எடுக்கும் Health Insurance க்கு வரிவிலக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் உங்களுக்கு வருமான வரி குறையலாம். 

3. நிம்மதியான வாழ்க்கை : நீங்கள் உங்களுக்கு என்ன நடக்குமோ எப்படிப்பட்ட உடல் பிரச்சனைகள் வருமோ என அஞ்சிக்கொண்டே வாழ வேண்டிய அவசியம் இல்லை. எது நடந்தாலும் உங்களுக்கு ஆகிற செலவை சமாளிக்க இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கிறது என்ற நம்பிக்கையோடு வாழ முடியும்.


Health Insurance Disadvantages

1. அதிகரிக்கும் பிரீமியம் தொகை : ஆரம்பத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை குறைவானதாக இருந்தாலும் கூட வயது ஆக ஆக அது அதிகமாகிக்கொண்டே போகும். இதனால் வயதானவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது என்பது செலவு அதிகமாக வைக்கக்கூடியது. 

 

2. சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் Waiting Period for Existing Health Problems என்ற விதிமுறையை வைத்துள்ளன. உங்களுக்கு ஏற்கனவே ஒரு நோய் இருக்கிறது எனில் நீங்கள் பாலிசி எடுத்த உடனேயே அதற்கான செலவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பிக்க முடியாது. அதற்காக அவர்கள் 1 முதல் இரண்டு ஆண்டுகள் வரைக்கும் காத்திருப்பு காலம் என்ற விதிமுறை வைத்திருப்பார்கள். அது சிக்கலானது. 

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியமா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அது உங்களுடைய குடும்ப சூழல், உங்களது பொருளாதார சக்தி ஆகியவற்றை பொறுத்தது. இப்போதைய காலகட்டத்தில் பெரும்பான்மையான நிபுணர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதை அவசியம் என பரிந்துரைக்கிறார்கள். 

பைக், காருக்கு இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? Insurance பற்றிய முழு தகவல்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *