எங்கே விழப்போகிறது சீனாவின் Long March 5 ராக்கெட்? உலக நாடுகள் அதிர்ச்சி

பூமியை நோக்கி கட்டுப்பாடு இல்லாமல் விழும் அதிக எடை கொண்ட பொருளாக இந்த ராக்கெட் இருக்கிறது. மக்கள் இருக்கும் பகுதியில் விழுந்தால் பெரிய சேதம் ஏற்படலாம். ஆனால் வாய்ப்பு குறைவு.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தியான்ஹே [Tianhe] எனும் விண்வெளி மையத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அதற்கான பொருள்களை சுமந்துகொண்டு Long March 5 என்ற ராக்கெட் ஏப்ரல் 29 அன்று சீன விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி பயணிக்கும் போது ராக்கெட் அது தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சுமார் 18 டன் எடையுள்ள சீனாவின் Long March 5 ராக்கெட் பூமியை நோக்கி கட்டுப்பாடு இல்லாமல் வந்துகொண்டு இருக்கிறது. எந்த இடத்தில் எந்த நேரத்தில் விழும் என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் கவலையடைந்து வருகிறார்கள்.

பொதுவாகவே ராக்கெட் ஏவப்படும் போது ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட இடைவெளியில் பூமியை நோக்கி விழுவது உண்டு. ஆனால் அவை அனைத்தும் பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளாகவே விழுந்துவிடும். அதேபோல அவை அனைத்தும் கடல் பகுதியில் விழுமாறு தான் ஏவப்படும். ஆனால் சீனாவின் இந்த ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்கு மேலாக சென்று பின்னர் பூமியை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. எங்கே இந்த ராக்கெட் விழும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து வருகிறார்கள். அந்த ராக்கெட்டின் பாதையை கணித்ததில் டர்க்மெனிஸ்தான் பகுதியில் இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு விழும் என கணித்து இருக்கிறார்கள். ஆனால் இது வெறும் கணிப்பு மட்டுமே. 

வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் உராய்வில் ராக்கெட்டின் பெரும் பகுதி எரிந்துவிட வாய்ப்பு உண்டு என சொல்லப்பட்டாலும் கூட அதிக சுமையுடன் ராக்கெட் இருப்பதனால் ஓரளவேனும் பொருள்கள் எஞ்சியிருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதியில் ராக்கெட் விழ வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ‘மில்லியனில் ஒரு வாய்ப்பு’ தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமியை நோக்கி கட்டுப்பாடு இல்லாமல் அதிக எடையோடு வரும் பொருள் இந்த ராக்கெட் தான் என்பது கவனிக்கத்தக்கது. பூமி இயற்கையிலேயே 70% நீரால் சூழப்பட்டிருப்பது என்பது நல்ல விசயமாக இருந்தாலும் ராக்கெட் விழுந்தால் தான் எங்கே விழும் என்பது தெரியும்.

சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தனது ராக்கெட்டை மறு வடிவமைப்பு செய்திட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *