பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad Book Download

பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம் இருக்கிறவர்கள் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad.


பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி

நானும் வாழ்க்கையில் பெரிய ஆளாக வரவேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு வலம் வருகிறவர்கள் தேடிப்படிக்கிற புத்தகங்களில் ஒன்று தான் ராபர்ட் கியோஸாகி  எழுதிய பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை [ rich dad poor dad ]. தமிழில் இதனை நாகலட்சுமி சண்முகம் என்பவர் மொழிபெயர்த்து இருக்கிறார். இந்த நூல் குறித்த ஒரு அறிமுகத்தை தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

 புத்தகம் : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

ஆசிரியர் :  நாகலட்சுமி சண்முகம் [தமிழ் மொழி பெயர்ப்பாளர்]

விலை : ரூ 231 

Click Here To Download/Buy : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad PDF

“பணத்தின் மீதான காதல் தான் தீயவை அனைத்திற்கும் மூலக்காரணம்”

 

“பணமின்மை தான் தீயவை அனைத்திற்கும் மூலக்காரணம்”

 

இந்த இரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் முரணானவை. இந்த புத்தகத்தின் நாயகன் ராபர்ட் கியோஸாகி, தனக்கு பணம் குறித்து கற்றுக்கொடுக்க முயன்ற தனது இரண்டு தந்தைகளின் (பணக்கார மற்றும் ஏழைத் தந்தை) வித்தியாசமான கருத்துக்கள் தான் மேலே உதாரணமாக சொல்லப்பட்டிருப்பது.

 

கியோஸாகிக்கு இரண்டு தந்தைகள். அவர்கள் இருவரும் பணம் குறித்து இவருக்கு தங்களது பாணியில் சொல்லிக்கொடுக்க முயலுகிறார்கள். பிற்காலத்தில் இரண்டு தந்தைகளில் ஒருவர் மிகப்பெரிய பணக்காரராகவும் மற்றொருவர் அன்றாட வாழ்வை சமாளிக்கவே கஷ்டப்படுகிற நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தனக்கு பணம் குறித்து எவ்வாறு அறிவுரைகளை கூறினார்கள், பின்னாளில் பணக்காரராக உயர்ந்தவர் கூறிய அறிவுரைக்கும் கஷ்டப்படுகிறவர் கூறிய அறிவுரைக்கும் இருக்கிற வித்தியாசங்கள் என்ன என இந்த புத்தகத்தில் நல்ல ஒப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தப்புத்தகம் 9 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது,

>> பணக்காரர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை

 >> பொருளாதாரக்கல்வி எதற்க்காக கற்றுக்கொடுப்பட வேண்டும்?

 >> உங்களது சொத்துக்களை அதிகரிக்க துவங்குங்கள்

 >> வரிகளின் வரலாறும் வணிக நிறுவனங்களின் சக்தியும்

 >> பணக்காரர்கள் பணத்தை கண்டுபிடிக்கின்றனர்

 >> கற்பதற்காக வேலை செய்யுங்கள் – பணத்திற்க்காக வேலை செய்யாதீர்கள்

 >> தடைகளிலிருந்து மீளுதல்

 >> துவங்குதல்

>> இன்னும் அதிகமாக வேண்டுமா? நீங்கள் செய்யக்கூடிய விசயங்கள்

யாருக்கு இந்த புத்தகம் சரியான படைப்பு?

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி

பணம் , முதலாளித்துவம் , வரிவிதிப்பு போன்ற பல்வேறு விசயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் பணக்காரராக உயர வேண்டும் என சிந்திப்போருக்கு இந்த புத்தகம் உந்துசக்தியாக இருக்கும். பண விசயத்தில் நீங்கள் உங்களது சிந்தனையை எப்படி மாற்றி கட்டமைத்துக்கொண்டால் வெற்றியடைய முடியும் என்பதற்கான பல விசயங்கள் இதில் இருக்கின்றன.

 நிஜ உலகத்தில் சமர்த்தியமானவர்கள் முன்னேறுவதில்லை, துணிச்சல்காரர்கள் தான் முன்னேறுகிறார்கள் என இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது என்னவோ மிகச்சரியான உண்மை தான். நன்றாக படித்திருப்பார்கள், நல்ல அனுபவம் கொண்டிருப்பார்கள். ஆனால் வேலையை விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தை துவங்கலாமே என்றால் அதனை செய்யமாட்டார்கள். காரணம், ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் என்னாவது? வாங்குகிற சம்பளமே போதும் என சொல்லிவிடுவார்கள். ஆனால் துணிச்சலாக செல்பவர்கள் வாழ்க்கையில் பெரும் முதலாளியாக மாறிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல உத்வேகமான செய்திகள் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது. பணம் குறித்து பேரார்வம் கொண்டிருப்போருக்கு இந்த புத்தகம் அவசியமான ஒன்றுதான்.

Click Here To Download/Buy : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad PDF

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *