ரஜினி அவர்கள் எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில் பேசிய “அரசியல் பேச்சு” பலரால் புகழப்பட்டுவருகிறது .
அப்படி என்னதான் பேசினார் ?
உண்மையாலுமே ரஜினியின் பேச்சு சிறப்பானதா ?
அவரது பேச்சு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ?
அந்த ஒரு கேள்விக்கு பதில் வரலையே ?
போன்ற கேள்விகளோடு ஒப்பிட்டு அவரது பேச்சை ஆராய்வோம் .
அப்படி என்ன பேசினார் :
எம்ஜிஆர் அவர்களின் புகழை பேசியதோடு தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்க சுமார் 10 நிமிடங்கள் பேசினார்.
கொள்கையை கேட்டால் தலை சுற்றுகின்றது என ஏன் சொன்னேன் என விளக்கினார் , அரசியல்வாதிகள் சரியாக இயங்காததால் நடிகனான நான் வருகிறேன் , ஆமாம் வெற்றிடம் இருப்பதாலேயே வருகின்றேன் , ஜெயலலிதா இருக்கும்போதே வாய்ஸ் கொடுத்தேன் எனக்கு பயமில்லை என தொடர்ந்தது அவரது பேச்சு .
உண்மையாலுமே ரஜினியின் பேச்சு சிறப்பானதா ?
ரஜினி அவர்களின் பேச்சு சிறப்பானதா இல்லையா என ஆராய்வதற்கு முன்பாக இவ்வளவு நாட்கள் அரசியல் பேசாமல் இருந்துவந்த ரஜினி சுமார் 15 நிமிடங்கள் பேசியிருப்பதே அவருடைய ஆதரவாளர்களை பொறுத்தவரை சிறப்பானதாக இருக்க வாய்ப்புண்டு .
சமூக வலைதளங்களில் , செய்திகளில் ரஜினி அவர்களை வெகுவாக விமர்சிக்க பயன்பட்டுவந்த “தலை சுற்றுகின்றது ” “அரசியல் வெற்றிடம் ” “ஜெயலலிதாவுக்கு பயமா ” போன்றவைகளுக்கு அவரே பதில் கொடுத்துவிட்டபடியால் இனி அவை பயன்படாமல் போக வாய்ப்பு இருக்கின்றது .
அவரது பேச்சு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ?
விபரம் அறிந்தவர்களுக்கு அரசியலில் திளைத்தவர்களுக்கு ரஜினி அவர்களின் பேச்சில் புதிதாக
ஒன்றுமில்லை என தோன்றலாம் அல்லது அது உண்மையானதாக கூட இருக்கலாம் . ஆனால் அந்த பேச்சு சாதாரண பாமர மக்களால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளாடுகிறது என்பதே வாக்கு அரசியலில் முக்கியம் .
கமல் அவர்கள் கட்சி தொடங்கி வேலைகளை செய்துகொண்டிருக்கும்பொது ரஜினி அவர்களின் “தேர்தல் வரும்போது கட்சி பற்றி அரசியல் பற்றி பேசுவோம் ” என்கிற நிலைப்பாடு தவறானதாக பார்க்கப்பட்டது . அது அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளுக்கும் தடையாக இருந்தது .
அப்படி இருந்துவந்த அவர்களுக்கு ரஜினியின் இந்த பேச்சு ஆறுதலாக , மகிழ்ச்சியூட்டுவதாக நிச்சயமாக இருக்கும் .
அனைத்தையும் விட ரஜினி அவ்வளவாக அரசியல் பேச மாட்டார் என கூறி வந்தவர்களுக்கு இந்த பேச்சு கலக்கத்தை கொடுக்க வாய்ப்புண்டு .
கலைஞர் , எம்ஜிஆர் , ஜெயலலிதா என அனைவரையும் தொட்டு பேசியதை பார்த்தால் ரஜினி விரைவாக அரசியல் கற்றுவருகிறார் என்பதை உணர முடிகிறது .
மீடியாக்களில் ஒரு வாரம் வலம் வரக்கூடிய வாய்ப்பும் இந்த பேச்சுக்கு இருக்கின்றது .
அந்த ஒரு கேள்விக்கு பதில் வரலையே ?
தன் மீதான பல விமர்சனங்களுக்கு மிக தெளிவாக பதில்களை படத்தில் பன்ச் வசனம் பேசுவதை போல பேசினார் . ஆனால் அவரையே சுற்றிவருகின்ற , அவருடைய அரசியல்வாழ்வையே திருப்பி போடும் சக்தி கொண்ட அந்த ஒரு கேள்விக்கு ரஜினி பதில் கூறாமல் போனது தற்செயலா ? வேண்டுமென்றவா என தெரியவில்லை .
அந்த கேள்வி ” ரஜினியை பாஜக தான் இயக்குகிறது . தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க ரஜினியை இறக்கியுள்ளது பாஜக ”
அவரை சுற்றிவரும் முக்கிய கேள்வியே இதுதான் .ரஜினியின் ஆதரவாளர்கள் இந்த பதிவினை படிக்க நேர்ந்தால் ரஜினி அவர்களை பதில் கூற சொல்லுங்கள் .
சொல்வாரா ரஜினி ? பார்க்கலாம் .
நம்ம சேதி :
ரஜினியோ கமலோ எடப்பாடியோ ஸ்டாலினோ எவரானாலும் கண்களை மூடிக்கொண்டு தலைவனாக ஏற்காதீர்கள் அவர்களுக்காக வாதாடாதீர்கள் . அவர்கள் குறித்து ஆராயுங்கள், கொள்கைகளை கேளுங்கள், அதுகுறித்து விவாதியுங்கள் அப்போது கிடைப்பான் உங்களுக்கான தலைவன் .
இதுபோன்ற அரசியல் பதிவுகளை படிக்க
லைக் செய்யுங்க
நன்றி
பாமரன் கருத்து
Share with your friends !