மீண்டும் கண்டிக்கத்தக்க ஒரு ஆபாச இணைய தாக்குதல் . இந்தமுறை ஜோதிமணி மீது ….

காங்கிரஸில் இருந்து விலகி இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் அரசியல் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருபவர்களில் இவரும் ஒருவர் .

இவர் மீது சில சமூக விரோத கும்பல் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் தொலைபேசி அழைப்பினால் தொந்தரவு செய்தும் வருகின்றனர் .இந்த வன்முறைக்கு  பாஜகவினரை காரணமாக கூறியுள்ளார் …

இதுகுறித்த அவரது பதிவு :

ஆபாச அவதூறுகளால் என்னை முடக்க முடியாது!

”பி.ஜே.பி-யின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர், தங்கள் சித்தாந்தத்தோடு முரண்படுபவர்கள்… மாற்றுக்கருத்து உள்ளவர்கள். அவர்கள், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் மகத்தான அடையாளத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராக…

ஆபாசமான வார்த்தை ஆயுதங்களை ஏவுதல், கொலை செய்தல், அமிலம் வீசுதல், பாலியல் வன்புணர்வு மிரட்டல் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்” என்று பி.ஜே.பி-யின் முன்னாள் தொண்டரான சாத்வி கோஸ்லா, சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி இந்தியாவுக்கே பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

”எனக்கு உங்கள் படையிடமிருந்து ஆபாச அவதூறுகள், அச்சுறுத்தல்கள் வருவது தொடர்ந்து நடப்பதுதான். வழக்கமாக அதை நாங்கள் கடந்துபோய் விடுவோம். இந்த முறை அதை, பொதுவெளியில் எதிர்கொள்வது என்று நான் முடிவு செய்ததற்குக் காரணம் ஒரு பெண்ணாக என்னை அவதூறு செய்து முடக்கிவிட முடியும் என்று நம்பும் உங்கள் சித்தாந்தம். நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட என்னைப் போன்ற பெண்களிடம் எடுபடாது என்று சொல்வதற்குத்தான் இதை வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளேன். என் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால்… அதை, கருத்துரீதியாக எதிர்கொள்ளும் உங்களுடைய உரிமையை மதிக்கிறேன். நான் பின்பற்றுகிற சித்தாந்தம் எனக்கு அன்பையும், சகிப்புத்தன்மையையுமே போதித்திருக்கிறது. இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறுப்பாக மட்டுமே பார்க்க முடிகிறது என்றால், உங்கள் சித்தாந்தத்தை என்னவென்று சொல்வது? என்னை அவதூறு செய்பவர்களுக்கும் அறிவு, சிந்தனை இருக்கக்கூடும். ஆனால், உங்கள் சித்தாந்தத்தின் மூளைச்சலவை, அவர்களையும் தங்களைத் தாங்களே வெறும் பாலியல் உறுப்பாக மட்டும் உணரவைத்துவிட்டது என்பது பெரிய துயரம்.

ஆபாசமாகப் பேசியவர்கள் வெட்கப்படுவார்கள்!

இதில் நான் அவமானப்படவோ, வெட்கப்படவோ, கூனிக்குறுகவோ, குறைந்தபட்சம் சிறிதும் மனசஞ்சலம் அடையவோ மாட்டேன். என்னிடம் இப்படி நடந்துகொள்பவர்கள்தான் அவமானப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும். அவர்கள் செய்த காரியத்துக்காகக் கூனிக்குறுக வேண்டும். கடந்த 24 மணிநேரத்தில் என்னுடைய தொலைபேசிக்கு 500 அழைப்புகளுக்கும் மேல் வந்திருக்கும். அது, இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் பயந்து நான் தொலைபேசியை அணைத்து வைக்கமாட்டேன். உலகெங்கிலும் உங்கள் நெட்வொர்க் எவ்வளவு பெரியது… எவ்வளவு பெரிய மனவியாதியால் அது உள்ளது என்பதை உலகின் பல நாடுகளிலும் இருந்து ஓயாமல் வரும் அழைப்புகள் உணர்த்துகின்றன. ஆனால், நான் இதற்கெல்லாம் பயந்து ஓடமாட்டேன். அவர்கள் களைத்துப் போகும்வரை அழைத்துக்கொண்டே இருக்கிற வாய்ப்பை வழங்குவேன். இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய இளைஞர்களை ஓர் அரசியல் கட்சி, அதுவும் இந்தியாவை ஆளுகிற கட்சி இவ்வளவு கேவலமான காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டு, சகிப்புத்தன்மையற்ற மனநோயாளிகளாக மாற்றிவிட்டதே என்று வருத்தப்படுகிறேன்”என்று பதிவிட்டதோடு பொதுமக்களுக்கும் அதைக் கோரிக்கையாக வைத்துள்ளார். இது, எனக்கான போராட்டம் மட்டும் அல்ல. இந்தச் சமூகத்துக்கான போராட்டம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
____________________________________

சில நாட்களுக்கு முன்பு தான் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு எவ்வாறு பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பர்களை அவதூரு மூலமாகவும் பாலியல் சீண்டல் மூலமாகவும் ஒடுக்க நினைக்கிறது என்பதினை அந்த வேலையை செய்துகொண்டிருந்த பாஜக தொண்டர் அளித்த வாக்குமூலமாக நாம் அறிந்தோம் .இப்போது அது நடந்தும் இருக்கின்றது …இது குறித்து படிக்க (https://www.pamarankaruthu.com/2016/12/troll.html?m=0)

இதுபற்றி கருத்து  தெரிவித்த பாஜக தமிழக தலைவர் இது முற்றிலும் கண்டிக்கதக்கது ..இதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார் …

ஒவ்வொரு கட்சியும் தனக்கென உள்ள கொள்கைகளுக்காக இயங்கி வருகின்றன ….இதில் எதிர்கருத்துகள் வருவது இயல்பு .அதுவே ஆரோக்கிய அரசியல் ..கருத்து தெரிவிப்பவர்கள் மீது இப்படி பாலியல் தொந்தரவு மற்றும் அவதூறு கிளப்பி கட்டுபடுத்த நினைப்பது ஐனநாயக விரோதம் .கண்டிக்கப்பட வேண்டிய விசயம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *