பேங்க் வாசலில் 20 பேருக்கு பின்னால் நிற்கும் போது தோன்றிய கேள்விகள் …
மோடி அவர்கள் கியூவில் நிற்கும் ஏழை மக்களுக்கு என்ன பலனை தர போகின்றார் ….
கல்வியில் தனியாரை ஒழித்து பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க போகிறதா ?
அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ வசதி இன்சூரன்ஸ் செய்யாமலே கிடைக்க போகிறதா ?
அனைத்து விவசாயிகளுக்கும் அரசே வட்டியில்லா முன்பணம் தந்து கடனால் விவசாயி சாவதை தடுக்க போகிறதா ?
உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளபோதும் உணவின்றி தவிப்பது சாவது நின்று போகுமா ?
அரசு போடும் வரிகளை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலை குறைத்து விற்கப்படுமா ?
இனிமேல் அரசு வழங்கும் மானியம் எதுவும் குறைக்கப்படவே மாட்டாதா ?
வெளிவந்த அனைத்து பணமும் இனிமேல் எந்த அம்பானி வீட்டு அடியிலும் உறங்காமல் ஏழையின் ஜன்னலில் சுற்றி வருமா ?
இதுல ஒண்ணு நடந்தா கூட வரிசையில் நிற்பதை சந்தோசமாக ஏற்று நிற்பேன் ….