இதுதான் சீனா பொருட்கள் விலை மலிவாக கிடைக்க காரணம்…….

இன்றைய உலகில் மின்னணு சாதனம் முதல் தலை கோதும் சீப்பு வரை அனைத்திலும் ‘Made in China’ என்ற வாசகத்தை பார்க்க முடியும்…அதுவும் மிக குறைந்த விலையில். எப்படி அவர்களால் மட்டும் இப்படி மலிவு விலையில் அனைத்து பொருள்களையும் விற்பனை செய்ய முடிகின்றது என்று இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த காரணங்கள் தான் இவை…
* குறைந்த ஊதியத்தில் பணியாட்கள் (Cost Efficient Labour)

உலகிலேயே குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் ஆட்கள் சீனாவில் அதிகம். இது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் சீனாவை விட மிக குறைந்த ஊதியம் பெரும் ஆட்கள் ஸ்ரீலங்காவிலும் வியட்நாமிலும் இருக்கிறார்கள்.ஆனால் சீனா பணியாட்களின் உற்பத்தி திறன் மற்ற நாடுகளின் பணியாட்களின் உற்பத்தி திறனை விட மிக அதிகம்.

* மூலபொருட்கள் கிடைக்கும் விதம் (Commendable supply chain)

இயற்கையாகவே சீனாவில் மூலபொருட்கள் அதுவும் குறிப்பாக மின்னணு சாதனங்களுக்கான மூலபொருட்கள் மிகவும் எளிதாக உள்நாட்டிலேயே கிடைக்கின்றது. மேலும் மூலப்பொருள் உற்பத்தி, தொழிற்சாலை, விநியோகம், பயனாளர் என அனைத்துமே மிக துரிதமாக நடப்பதும் மலிவு விலைக்கு காரணம். மேலும் அனைத்து கட்டமைப்புகளும் தொழில் செய்வதற்கு ஏற்றதாக இருப்பது சீனாவின் பலம்.

* போட்டி விலை (Competitive Pricing)

சீனாவில் ஒரு சில வரி விதிப்புகள் இல்லை. குறிப்பாக R&D and product innovation. முதலாவதாக சீனாவில் பெரும்பாலான ஆர்டர்கள் வெளிநாட்டில் இருந்து மட்டுமே வருகின்றன. மேலும் அவை அங்கு கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை தயாரிப்பது மட்டுமே அவர்களின் வேலை. இரண்டாவதாக [Lack of IPR(Intellectual Property Enforcement)] சீனாவில் எளிதாக அனைத்து கம்பெனிகளின் தயாரிப்புகளை காப்பி அடிக்க முடியும். ஹோண்டா கம்பெனியில் ஒரு பைக் மாடல் வெளியிடப்பட்டால் அது உடனடியாக சீனாவில் காப்பி அடிக்கப்படும்.

* அதிக உற்பத்தி (Mass Productivity and Dumping)

சீனாவின் மிக முக்கிய உக்தி இதுவே. அதிகபடியான பொருள்களை உற்பத்தி செய்து அந்த பொருளுக்கான மார்கெட் விலையினை குறைய செய்து மற்ற நாடுகளின் கம்பனிகளின் லாபத்தினை பாதிக்க செய்து அவைகளை சந்தையில் இருந்து விரட்டுவதே.

* யுவான் கரன்சியின் மதிப்பு

சீனாவின் கரன்சியான யுவான் அமெரிக்க டாலரை விட குறைத்து மதிப்பிடப்படுவதும் சந்தையில் சீனா பொருள்கள் விலை மலிவாக கிடைப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

நன்றி 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *