Youth participation in election இன்னும் எத்தனை காலங்கள் காத்திருக்க போகிறாய் இளைய சமூகமே? ? ?

* Election *அரசியலில் இளைஞர்கள் என்றவுடன் அவர்களின் முன்னால் வந்து நிற்கும் கேள்விகள் ஆயிரம் . குறிப்பாக பின்வரும் கேள்விகளை சந்திக்காமல் இருக்க முடியாது , .

படிக்கும் வயதில் அரசியல் தேவையா?
இவன் எங்கே பெற்றவர்களை காப்பாற்ற போகின்றான்? அரசியல் ஒரு குப்பை மேடு இவனும் அதில் போய் விழ போகின்றான் 
இன்னும் பல . …
இது போன்ற கேள்விகளும் பேச்சுக்களுமே நம்மை பாடாய் படுத்திவிடும் . 

ஒருவன் அரசியலுக்கு வருகின்றான் என்று வைத்து கொண்டால் அவனுக்கு எதிராக இருப்பது யாரோ ஒரு சிலர் அல்ல. இந்த ஒட்டு மொத்த சமூகமும் அவனுக்கு எதிராக நிற்கின்றன . ஆமாம் எந்த பெற்றோர்கள் தன் பிள்ளை நல்ல அரசியல்வாதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசியல் வாதிகள் மட்டுமே தன் பிள்ளை அரசியல்வாதியாக வர விரும்புகிறான். ஆசிரியர் தன் பிள்ளை ஆசிரியராக வந்தால் போதும் என்றும் மருத்துவர் தன் பிள்ளை மருத்துவராகவும் வந்தாலே போதும் என்று எண்ணுகிறார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த நிம்மதியான வாழ்வு தன் பிள்ளைகளுக்கு கிடைத்தால் போதும் என்றே எண்ணுகிறார்கள். அவர்களுக்கு காமராஜர் போலவும் கக்கன் போலவும் நேர்மையான அரசியல்வாதிகல் வேண்டும். ஆனால் அது தன் பிள்ளையாக இருக்க கூடாது.

நான் நிறைய முறை கேட்டதுண்டு இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அழைப்பதை. நமது பிரதமர் கூட அவ்வாறு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையாகவே அரசியல் தலைவர்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறர்களா என்றால் நிச்சயமாக அவர்கள் விரும்புவதிலை. உதாரணமாக சில வாரங்களுக்கு முன்பாக கன்னையா குமார் என்ற மாணவர் தலைவர் தேசத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்தார் என்று கைது செய்ய பட்டார். ஆனால் அவர் அப்படி எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற விடுவிப்பில் வந்த அவர் அரசுக்கும் நம் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கும் எதிராக அவருடைய கருத்துகளை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஒருவர் அல்ல பலபேர் அவரை முதலில் சென்று படிக்க சொல்லுங்கள் என்றும் அல்லது படிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொல்லுங்கள் என்றும் வீர வசனம் பேசுகின்றார்கள் இதில் இருந்தே அவர்களின் நிஜ முகம் வெளிபடுகின்றது . அவர்கள் அழைத்தது நம்மை போன்ற இளைஞர்களை அல்ல அவர்களின் வாரிசுகளை.

நாம் இன்னும் அரசியலை ஒரு வேண்டாத வேலையாகவும் நமக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை போலவே வாழ்ந்து வருகின்றோம். நன்றாக கவனித்து பாருங்கள் உங்களை யார் வழி நடத்துகிறார்கள். கல்வி அமைச்சர் சொல்லும் பாடங்களையே ஆசிரியர்கள் நடத்துகிறார்கள் மருத்துவ அமைச்சர் இயற்றும் சட்டங்களின் படியே மருத்துவமனை இயங்குகின்றது. அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்களின்படியே நாம் நடக்க வேண்டி இருக்கிறது. நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விசயங்களிலும் அரசியல் கலந்து இருக்கிறது.

(Youth in election )இதுவரை அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அல்லாதோர் MLA MP ஆனதில்லை என்ற வரலாற்றினை உடைத்தெறிய இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலுக்கு வரவில்லை என்றாலும் நம்மை போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களுக்கு உறுதுணையாகவாவது இருக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளைஞர்களுக்கு அரசியலும் ஒரு துறைதான் என்றும் அது வாழதகாத துறை அல்ல என்பதையும் மாணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் உணர்த்தவேண்டும்.

இளைய சமூகமே வா….

உங்கள் கருத்துகளை பகிரவும் ,…..

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *