Site icon பாமரன் கருத்து

JEE தேர்வில் இண்டெர்நெட், கோச்சிங் இல்லாமல் 89.11% மார்க் பெற்று அசத்திய பழங்குடியின மாணவி

நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் JEE தேர்வில் 89.11% பெற்று அசத்தி இருக்கிறார்.

நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பழங்குடியின மாணவி ஒருவர் JEE தேர்வில் 89.11% பெற்று அசத்தி இருக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிப்போயின. பொருளாதாரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலை ஏற்படுத்தவில்லை, பல மாணவர்களின் படிப்பிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா பாதிப்பு. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மமதா எனும் 17 வயது மாணவி. இவர் Joint Entrance Examination (JEE) தேர்வுக்கு படித்து வந்தார். இவர் தெலுங்கானாவில் இருக்கும் மிகவும் பின்தங்கிய பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவி. இவரைப்போன்ற மாணவிகளுக்கு உதவுவதற்காக தெலுங்கானா சமூக மற்றும் பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் [Telangana Social and Tribal Welfare Residential Educational Institutions] செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் வாயிலாக மிகவும் பின்தங்கிய பிரிவில் இருக்கும் தலித், பகுஜன், ஆதிவாசி வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்க முடியாத குடும்ப சூழல்

இங்கு தான் மமதா எனும் மாணவியும் படித்து வந்தார். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள மமதாவினால் இயலவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினால் ஸ்மார்ட் போன் வாங்கித்தர இயலவில்லை. ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகளிலும் இவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் தான் ஒரு வழியாக பயிற்சி மையத்திற்கு சென்று இருக்கிறார் மமதா. மிகவும் கடினமாக படிக்கும் மாணவியான இவர் நடைபெற்ற தேர்வில் 89.11% மதிப்பெண்ணை பெற்று சாதனை புரிந்திருக்கிறார். தான் 90% மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்த்திருந்தேன் சற்று குறைந்துவிட்டது என வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் மமதா.

மமதா மட்டுமல்ல இவரோடு சேர்த்து இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட 700 மாணவர்கள் JEE தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்து இருக்கிறார்கள்.

நீட் தேர்வு அச்சத்தினால் ஒருபுறம் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்ற சூழ்நிலையில் அத்தனையையும் தாண்டி JEE தேர்வில் வெற்றி பெற்றுள்ள மமதா அனைவருக்குமே ஒரு முன்னுதாரணம்.

தற்கொலை எப்போதும் தீர்வல்ல
தொடர் முயற்சியே தீர்வு !

கட்டுரை எழுதியவர் : வினோத் குமார்


Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version