Site icon பாமரன் கருத்து

கொரோனா வைரஸ் இத்தாலி அதிகமாக பாதிக்கப்பட்டது ஏன்?

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவியதாக கருதப்படும் சீனாவிற்கு வெளியே அதிக இறப்புகளை தற்போது சந்தித்துக்கொண்டு இருக்கும் நாடுகளின் வரிசையில் இத்தாலி 1809 இறப்புகளுடன் முதலிடம் வகிக்கிறது.
கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொருநாளும் புதிய நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுகிறார்கள். புதிதாக நோய் தோற்று ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. நோய் பாதிப்பு துவங்கியதாக கருதப்படும் சீனாவில் புதிதாக வைரஸ் பரவல் ஏற்படுகிறவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக சீனாவிற்கு வெளியேயும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக இத்தாலி [1,809], ஈரான் [724] போன்ற நாடுகள் இதில் முதலிடத்தில் இருக்கின்றன. [New data]

இன்னும் நோய்க்கு மருந்து கண்டறியப்படாத சூழலில் பொதுமக்கள் நோய்க்கான அறிகுறி தெரிந்தால் ஆரம்பத்திலேயே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.

இத்தாலி ஏன் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது?

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இத்தாலியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் சீனாவிற்கு சென்று வந்ததற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆகவே வைரஸ் வேறு யாரிடம் இருந்தேனும் அவருக்கு பரவி இருக்கலாம். இதில் கொடுமையான விசயம் என்னவெனில் அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவர் மூலமாக கொரோனா வைரஸ் அவரது மனைவி, சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் என அனைவருக்கும் பரவி இருக்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே பலருக்கும் பரவி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் அதிகம் இறப்பவர்கள் வயதானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக வயதுடையவர்களை கொண்டிருக்கும் நாடு ஜப்பான். இரண்டாவது இடத்தில் இத்தாலி தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் அதிகமாக இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது .

தொடுதலின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என கூறப்பட்டவுடன் தான் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறை தற்போது அதிகரித்து இருக்கிறது. ஆனால் இத்தாலியை பொறுத்தவரைக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹலோ சொல்லும்போது முத்தமிடும் வழக்கம் இருக்கிறது என கூறப்படுகிறது. இது இரண்டு நபர்களுக்கு இடையே இருக்கும் தூரத்தை குறைக்கிறது. இதுவும் கூட காரணமாக இருக்கலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைவாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது பட்டியலில் முன்னிலையில் இருக்கின்ற நாடுகளிலும் ஆரம்பத்தில் இப்படித்தான் எண்ணிக்கை குறைவாக இருந்தது,ஆனால் அதன்பிறகு எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரிக்க துவங்கியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அவர்கள் தமிழக அரசு மேற்கொண்டுவரும் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

ஆனால் நாம் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பை முற்றிலுமாக அகற்றிட முடியும். மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது மட்டுமே போதுமானது அல்ல. அதேபோல பல ஆயத்த நடவெடிக்கைகளை நமது அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திருவிழாக்கள், மத வழிபாடுகள், திருமண நிகழ்வுகள், அரசு நிகழ்ச்சிகள், பொது கூட்டங்கள் என வாய்ப்புகளுக்கு இடம் அளிக்கின்ற அனைத்து விசயங்களையும் தடை செய்திட வேண்டும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version