Site icon பாமரன் கருத்து

கரோனா வைரஸ் – சிறப்பாக எதிர்கொள்ளும் சிங்கப்பூர் – மற்ற நாடுகளும் பின்பற்ற முடிவு

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

இப்போதைக்கு வெளிப்படையாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுமைக்கும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸ் காரணமாக இறந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் கரோனா வைரஸை கட்டுப்படுத்த சிறப்பான நடவெடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. சுவாச மண்டலத்தை தாக்கி கடுமையான காய்ச்சலை உண்டாக்கக்கூடிய இந்த புதியவகை வைரஸ் காரணமாக 41 பேர் சீனாவில் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிப்பு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது.

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ்

 

கரோனா வைரஸ்அல்லது கோவிட் 19 வைரஸ் பாதிப்பு என்பது ஆரம்பத்தில் சீனாவின் வூஹான் நகரில் தான் துவங்கியது. கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு வூஹான் நகர் முழுவதுமாக வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட அதற்கு முன்பே அங்கிருந்து பிற இடங்களுக்கு பயணம் செய்தவர்களின் வாயிலாக வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுமைக்கும் பரவியது. தங்கள் நாடுகளுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்த நாடுகள் அவர்களை சில நாட்கள் தங்கவைத்து மருத்துவ பரிசோதனையை முடித்து எந்த பாதிப்பும் இல்லை என்பதை அறிந்தால் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியது. ஆனால் சில நாட்கள் கழித்து கூட கரோனா வைரஸ் அவர்களை பாதிக்கும் என்பது பின்னாளில் தான் தெரிய வந்தது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த ஒருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே அந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது என்பதும் கண்டறியப்பட்டது. 

 

இப்படி ஒவ்வொரு விசயமும் புதிது புதிதாக தெரியவர இதனை எப்படித்தான் கையாள்வது என தெரியாமல் உலக நாடுகள் புலம்பின. அமெரிக்காவில் உயிர்பலி ஏற்பட்டிருக்கிறது, இந்தியாவில் ஹைதராபாத், தெலுங்கானாவில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஜப்பான், தென்கொரியா போன்றவை மிகக்கடுமையாக பாதிப்படைய துவங்கி இருக்கிறது. தற்போது வரைக்கும் கரோனா வைரஸ்க்கு இதுதான் மருந்து என எதுவும் கண்டறியப்படவில்லை. வேற்று மருந்துகளைத்தான் கொடுத்து அவர்கள் சோதித்து வருகிறார்கள். மருத்துவர்களுக்கு வேறு வழியும் இல்லை. 

 

 

அண்மையில் வந்த ஒரே ஆறுதலான செய்தி, சீனாவில் புதிதாக பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பதுதான். ஆனால் மற்ற நாடுகளில் புதிதாக எண்ணிக்கையை கரோனா வைரஸ் துவங்கியிருக்கிறது என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும். 

 

சிறப்பாக தடுப்பு நடவெடிக்கைகளை மேற்கொள்ளும் சிங்கப்பூர்

 

கிட்டத்தட்ட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் வணிக விசயமாக வந்துசெல்லக்கூடிய இடங்களில் முதன்மையானது சிங்கப்பூர். நெருக்கமான மக்கள்தொகையை கொண்டிருந்தாலும் கூட மிகவும் குறுகிய பரப்பளவிலான் இடம், அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் திறன் கொண்ட சிசிடிவி தொழில்நுட்பம், மருத்துவ நிர்வாகம் போன்றவற்றை கொண்டிருக்கிறது சிங்கப்பூர். அதிலும் கரோனா வைரஸ்க்கு எதிராக மிகச்சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்தது சிங்கப்பூர் என்கிறார்கள் வல்லுநர்கள். 

 

சீனாவில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டவுடன் சீனா மற்றும் கொரிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடுத்து நிறுத்தி கடுமையான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தியது சிங்கப்பூர் நிர்வாகம். தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவெடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது. மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியில் செல்பவர்கள், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ உதவிகொடுக்கப்படுகிறது. 

 

நோய் பாதிப்பு தனக்கு வந்திருப்பதாக ஒருவர் சந்தேகம் கொண்டால் அரசை எளிதில் தொடர்புகொள்ளும் விதமாக ஒரு குறுந்தகவல் அனுப்பும் ஆப் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒருவர் நோய் பாதிப்பு குறித்து அரசிடம் தகவல்களை மறைத்தாலோ அல்லது பயண விவரங்களை மறைத்தாலோ அவர்களின் மீது கடுமையான குற்ற நடவெடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு செய்துவருகிறது.

 

2013 ஆம் ஆண்டு 33 பேரை பலி கொண்டது சார்ஸ் நோய், அதேபோல 2010 இல் பன்றிக்காய்ச்சல் நோயால் கிட்டத்தட்ட  4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போதே இதுபோன்ற திடீர் வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க போதுமான கட்டமைப்புகளை செய்துவந்தது சிங்கப்பூர். எளிமையாக கண்காணிக்கும் வசதி, தடையில்லாத மருத்துவ பொருள்கள், சிறப்பான அரசு போன்ற பல்வேறு காரணங்களினால் சிங்கப்பூர் மிகச்சிறப்பாக கரோனோ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தி வருகிறது. 

 

தற்போது மற்ற நாடுகளும் கூட சிங்கப்பூர் போலவே நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என பரிசீலித்து வருகின்றன. ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் கண்காணிப்பு, மருத்துவ உதவி, கட்டுப்பாடு என்பது எப்படி சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் சாத்தியப்பட்டால் மட்டுமே நோய் பாதிப்பை நம்மால் கட்டுப்படுத்திட முடியும். மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது உறவினர்களுக்கோ சந்தேகம் ஏற்படும்படியாக நோய்ப்பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்வது கூட ஒருவித உதவிதான்.  


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version