முந்தைய பதிவுகளில், ஒவ்வொரு காலகட்டத்திலும் விளம்பரங்கள் எவ்வாறு செய்யப்பட்டன என்பதனை பற்றியும் டிஜிட்டல் அட்வர்டைசிங் என்றால் என்ன என்பதனை பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் டிஜிட்டல் அட்வர்டைசிங் ஏன் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றது என்பதனையும் அதன் சிறப்புக்களையும் பார்ப்போம்.
ஏற்கனவே விளம்பரங்கள் தொலைக்காட்சியின் மூலமாகவும் செய்தித்தாள்களின் மூலமாகவும் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டுகள் மூலமாகவும் செய்யப்படுகிற போது எதற்காக டிஜிட்டல் அட்வர்டைசிங் (Digital Advertising) இன் தேவை வருகிறது? அப்படி என்னென்ன நன்மைகள் டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்டாலே அதன் வளர்ச்சிக்கான காரணம் உங்களுக்கு புரியும்.
Digital Advertising is Targeted
Targeted என்பதன் பொருள் “சரியான, தேவையான நபர்களுக்கு விளம்பரங்களை காட்டுதல்”.
உதாரணமாக நாம் சாலையில் பயணிக்கும் போது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பெரிய பெரிய பிளக்ஸ் போர்டுகளை ஜவுளிக்கடைக்காரர்கள் நகைக்கடைக்காரர்கள் வைத்திருப்பதை பார்த்திருப்போம். அந்த விளம்பர போர்டுகளை யாரெல்லாம் பார்ப்பார்கள்? அந்த வழியாக பயணம் செய்பவர்கள் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சென்று அந்த கடையில் பொருள்களை வாங்குவார்களா என்றால் பெரும்பாலும் இருக்காது.
What is the important of digital advertising? Read Here
அதே போலத்தான் செய்தித்தாள்களில் வருகின்ற விளம்பரங்களின் நிலைமையும். சென்னையில் இருக்கக்கூடிய கடையில் கொடுக்கக்கூடிய ஆடி தள்ளுபடி விளம்பரம் புதுக்கோட்டையில் படிப்பவரின் செய்தித்தாளில் இருக்கும். அவர் அந்த விளம்பரத்தை பார்ப்பதால் சென்னையில் இருக்கும் கடைகாரருக்கு எந்த பயனும் இருக்க போவது இல்லை.
இந்த மிகப்பெரிய குறைபாடுகளை கலையக்கூடிய சிறப்பான வசதி டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் இருக்கின்றது. அதனை தான் “Audience Targeting” என அழைக்கிறோம். தமிழில் “சரியான நபரை கண்டறிதல்” என பொருள் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நான் சென்னையில் இருந்து இன்டர்நெட் உதவியுடன் ஆன்லைனில் செய்தி படிக்கிறேன் என வைத்துக்கொள்வோம். நான் பயன்படுத்துகின்ற IP Address ஐ வைத்து நான் எங்கிருக்கிறேன் என்பதனை அறிய முடியும். எனக்கு சென்னை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை காட்டிட முடியும். இதனை போலவே வேறு ஊரில் இருப்பவருக்கு அது சம்பந்தப்பட்ட விளம்பரங்களை காட்டிட முடியும்.
இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு ‘Targeting’ களை செய்திட முடியும். அவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
Digital Advertising is Completely Measurable
ஒரு கடைக்காரர் 1 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அது சுவரில் போஸ்டர் ஒட்டுவதாக இருக்கலாம், நாளேடுகளில் அல்லது தொலைக்காட்சியில் அல்லது ரேடியோவில் விளம்பரம் செய்வதாக இருக்கலாம். அப்படி விளம்பரம் செய்தபின்பு கடைக்கு அதனால் லாபம் கிடைத்தால் சரி, கிடைக்காமல் போனால் என்ன செய்வது? ஒருவேளை லாபம் கிடைத்தாலும் அது தான் செய்த விளம்பரத்தால் தான் வந்ததா என்பதனையும் தெரிந்துகொள்ள முடியாது.
மேலே கூறியுள்ளபடி விளம்பரங்களை செய்திடும்போது நமது விளம்பரங்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அந்த விளம்பரங்களை பார்த்து எத்தனை பேர் நமது பொருள்களை வாங்கினார்கள் என எதனையுமே அறிந்திட முடியாது. ஆனால் டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் அந்த குறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது.
ஆம் டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் நீங்கள் எந்த நபருக்கு விளம்பரங்களை காட்டினீர்கள், அவர் எந்த ஊரில் இருந்து பார்த்தார், விளம்பரத்தை பார்த்து நமது பொருள்களை வாங்கினாரா உட்பட பல விவரங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
அதிகரிக்கும் ஆன்லைன் வர்த்தகம்
தற்போது ஆன்லைனில் வீட்டு உபயோகப்பொருள்கள், TV , Computer ((Amazon, Flipkart,ebay etc) சாப்பாடு (UberEats, Footpanda,Zoomato etc ) என ஆரம்பித்து Ticket Booking (Red Bus, Bus India etc), eLearning, Video (youtube, amazon video, hotstar) என வாழக்கைக்கு தேவையான அனைத்தையுமே இன்று ஆன்லைன் மூலமாகவே செய்திவிட, வாங்கிவிட முடியும். தற்போது துணி துவைக்க (laundry) கொடுப்பதற்கு கூட ஆன்லைனில் வசதி வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுபோன்ற பல நன்மைகளையும் பொதுமக்களின் வரவேற்பினையும் பெற்று இருப்பதனால் தான் டிஜிட்டல் அட்வர்டைசிங் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
Digital Device is Every Where
தகவல் தொழில்நுட்பத்துறையில் (Information Technology) பல அதீத முன்ன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. அதன் தாக்கத்தினால் இன்று மொபைல் வைத்திருப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாக காணப்படுகின்றது. பலரோ ஒருவருக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மொபைல்களை பயன்படுத்துகின்றனர்.
மேலும் தற்போது இணையவசதியை கிராமப்புற மக்கள் முதற்கொண்டு நகரில் வாழும் மக்கள் வரை அனைவருமே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். Mobile Recharge செய்யும் விலையில் Jio ,Airtel , BSNL போன்றவை கொண்டுவந்த அதிரடி விலை குறைப்பும் இதற்க்கு முக்கிய கரணம். இதன் காரணமாகத்தான் Digital Advertising மிகப்பெரிய அசுர வளர்ச்சியை அடைந்துகொண்டு இருக்கின்றது. பயணிக்கும்போது இனி சாலைகளை எவரும் பார்க்கப்போவது இல்லை, பெரும்பாலானவர்கள் மொபைல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனைகளை தான் பார்க்கப்போகிறார்கள். பிறகு சுவர்களில் விளம்பரம் செய்து என்ன பயன்?
Advantages of Digital Advertising in Tamil :
டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் தேவையான நபர்களுக்கு விளம்பரங்களை காட்ட முடியும்
டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் யார் விளம்பரங்களை பார்த்தது, யார் வாங்கியது என்பதனை அறிந்திட முடியும்.
மொபைல் போன் உள்ளிட்ட கருவிகளின் எண்ணிக்கையும் பயன்பாடும் தொடர்ந்து அதிகரிப்பதனால் டிஜிட்டல் அட்வர்டைசிங் வளர்ச்சி அடைகிறது.
இணையப்பயன்பாடு மற்றும் ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் மக்களுக்கு அதிகமாக இருப்பதனால் டிஜிட்டல் அட்வர்டைசிங் வளர்ச்சி அடைகிறது.
அடுத்த பதிவு : Digital Advertising Important Terms | Tamil | டிஜிட்டல் அட்வர்டைசிங் முக்கிய வார்த்தைகள்