விவரம் தெரிந்தவுடன் கிட்டத்தட்ட அனைவருமே “சாதிக்க வேண்டும்” “எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்ற எண்ணத்துடனே வாழ்க்கையை துவங்குகிறோம். இதில் சிலர் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள் பலர் சாதிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் என சொல்கிறார்கள்.
விவரம் தெரிந்தவுடன் கிட்டத்தட்ட அனைவருமே “சாதிக்க வேண்டும்” “எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்ற எண்ணத்துடனே வாழ்க்கையை துவங்குகிறோம். இதில் சிலர் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள் பலர் சாதிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் என சொல்கிறார்கள்.
பலர் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணம் பல இருக்கின்றன. அதில் முக்கியமான காரணம் என்னவெனில், பலருக்கு தான் என்ன சாதிக்க நினைக்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருப்பது தான். “வாழ்க்கையில எதாவது சாதிக்கணும் சார், என்ன பண்ணலாம் சொல்லுங்க” என பலர் கேட்பதனை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்டவர்களால் எப்படி சாதிக்க முடியும்? எந்த ஊருக்கு செல்கிறோம் என்பதனை முடிவு செய்யாமல் பேருந்து, ரயில், விமானம் என எதில் போனாலும் என்ன பயன் ஏற்பட்டுவிடப்போகிறது. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களது மனதிற்குள் எழுந்ததோ அதனைப்போலவே “என்னைப்பொறுத்தவரைக்கும் சாதனையாக நான் எதனை கருதுகிறேன்” என்ற எண்ணமும் உங்களது மனதிற்குள் ஒளிந்துகொண்டு இருக்கும் அதனை தேடிப்பிடித்தால் தான் உங்களால் உண்மையாலுமே சாதிக்க முடியும்.
பின்வரும் முக்கியமான கேள்விகள் உங்களுக்கு சாதனை செய்திட உதவும்,
நான் சாதனையாக எதனை நினைக்கிறேன்? நான் ஏன் அந்த சாதனையை எட்ட வேண்டும்?
விராட் கோலியை பொறுத்தவரைக்கும் “100 சதங்கள் அடிப்பது சாதனை” என எண்ணுவார், “செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தும் பணியை செய்திட விரைவான போக்குவரத்து தொழில்நுட்பத்தை வடிவமைப்பது” சாதனை என எலன் மஸ்க் எண்ணுவார். ஆக சாதிக்க விரும்பும் அனைவரும் நம்மை “சாதனை” என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். நம் நண்பர்களை பொறுத்தோ, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை பொறுத்தோ நாம் என்ன “சாதனை” செய்யப்போகிறோம் என்பது இருக்க கூடாது, அது நம் இதயத்தில் இருந்து உருவாக வேண்டும்.
அடுத்த கேள்வி, அந்த சாதனையை செய்வதனால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது. இந்தக்கேள்விக்கான பதில்தான் அந்த சாதனையை நோக்கி உங்களை வெற்றிகரமாக கொண்டுசெல்லும். உதாரணத்திற்கு எவரெஸ்டில் ஏறுவது மட்டுமே சாதனை அல்ல, வங்கிப்பணியில் சேர்வதே சிலருக்கு சாதனையாக இருக்கலாம். ஒருவேளை அதில் சேர்த்துவிட்டால் தனது குடும்ப சூழல் மாறும், கடன்களை அடைக்கலாம் என “சாதனையால்” கிடைக்கப்போகும் நன்மையை பட்டியலிடுங்கள். மனதிற்கு ஆனந்தத்தை தரும் என்பதுகூட மிகச்சிறந்த காரணம் தான்.
தடைகளை பட்டியலிடுங்கள்
இதுதான் நான் சாதனையாக நினைக்கிற விசயம் என முடிவு செய்துவிட்டபிறகு பாதி தூரத்தை நீங்கள் கடந்துவிட்டீர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். உங்களது சாதனைக்கு எது தடையாக இருக்கிறது என்பதனை பட்டியலிடுங்கள். பின்னர் ஒவ்வொரு தடையாக அகற்றிட கடுமையாக முயற்சி செய்திடுங்கள். மீத தூரத்தை மிக எளிமையாக உங்களால் கடந்துவிட முடியும்.
முதல் அடியை எடுத்துவையுங்கள்
எல்லாற்றிற்கும் முதன்மையானது முதல் அடியை எடுத்து வைப்பதுதான். பெயரளவில் இருந்து செயலளவில் நீங்கள் உங்களது சாதனை பயணத்தை துவங்கிவிட்டால் பிறகு எந்த தடையானாலும் உங்களால் அதனை எளிதில் தகர்த்தெறிந்துவிட்டு போக முடியும். முதல் அடியை எடுத்துவைத்துவிடுங்கள், பிறகு அனைத்தும் தானாக நடக்கும்.
சாதனை படைக்க வாழ்த்துக்கள்!
Read More :
வாழ்க்கையில் ஜெயிக்க ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன ஒரே ஐடியா இதுதான்
பயமே முதல் எதிரி – விரட்டி விடுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!