“Innovation is saying ‘no’ to 1,000 things. You have to pick carefully.”
ஒரு படிப்பு, ஒரு தொழில், ஒரே விசயத்தில் முயற்சி என இருந்தால் எளிமையாக வெற்றி பெற முடியும். நிராகரிக்க தெளிவு இருக்க வேண்டும்.
தொழில்துறையில் இருக்கும் ஜாம்பவான்களை பற்றி சொல்லும்போது “அவர் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பார்கள். அதற்க்கு அர்த்தம் அவர் எந்த தொழிலை ஆரம்பித்தாலும் வெற்றியடைந்துவிடுவார் என்பதுதான். இன்னும் சிலரை சொல்லுவார்கள், அவர் தொடாத பிசினஸ் இல்லை அவரும் என்னனென்னவோ செய்து பார்த்தாலும் ஒன்றும் உருப்படியாக அமையவில்லை. இப்படியும் சிலர் இருப்பார்கள்.
இதில் முதல் ரகமான “அவர் தொட்டதெல்லாம் துலங்கும்” என்ற ஜாம்பவான்களாக நாமும் மாறிட என்ன செய்திட வேண்டும்? நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்ளவேண்டும்? இந்த கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துகொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட தேடலில் இருப்பவர்களுக்கு டெக் உலகின் ஜாம்பவான் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதனைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லும் ரகசியம்
உலகில் இருக்கும் மிகச்சிறந்த பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தை கட்டமைத்து அதனை வெற்றிகரமான நிறுவனமாக வழிநடத்தியவர் என்ற பெருமை ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை சாரும். அப்படிப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றிபெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறார். எப்படி தான் துவங்கும் நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன என கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் கூறுகிறார்.
“Innovation is saying ‘no’ to 1,000 things. You have to pick carefully.”
இதன் பொருள் இதுதான். புதுமை அல்லது எதிர்காலம் 1000 விசயங்களுக்கு “வேண்டாம்” என சொல்கிறது, ஆகவே நீங்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆண்டின் துவக்கத்தில் உங்களுக்கு பல யோசனைகள் வருகின்றன என வைத்துக்கொள்வோம். நீங்கள் எதற்கும் “நோ” சொல்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படி பல விசயங்களில் கவனம் செலுத்திடும் போது இறுதியில் எது ஒன்றிலும் முழுமையாக கவனம் செலுத்திட முடியாத நிலைக்கு தான் வருவீர்கள்.
இங்கு தான் ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்கிறார், உங்களுக்கு பல யோசனைகள் வந்தாலும் அதில் பலவற்றிற்கு “வேண்டாம்” என சொல்லத்தெரிய வேண்டும். சரியான ஒன்றினை தேர்ந்தெடுக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் உங்களால் வெற்றிபெற இயலாது. வெற்றி பெறுகிறவர்கள் அவ்வளவு எளிதில் எந்தவொரு புதிய விசத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் “நோ” என்றுதான் சொல்லுவார்கள்.
தனி ஒருவன் படத்தில் வில்லன் நடிகராக இருக்கக்கூடிய சித்தார்த் அபிமன்யு சொல்கிற யோசனையும் இதுதான்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!