தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkilirunthu Oru Sooriyan
கருணாநிதி என்னும் ஆளுமை குறித்து அவரது அருகிலே இருந்து அவரை பார்த்து ரசித்தவர்களின் நேர்காணலின் மூலமாக தந்திருப்பது மிக சிறப்பு. வருங்கால இளம் தலைமுறைகள் திராவிட கட்சிகளும் கருணாநிதி அவர்களும் ஊழலை மட்டுமே செய்தார்கள் என்கிற பொய்யை மறுக்கவும் திராவிட இயக்கங்களின் சாதனைகளையும் அதில் கருணாநிதியின் பங்கினையும் அறிய இந்நூல் உதவும்.
Download/Buy : Therkilirunthu Oru Sooriyan தெற்கிலிருந்து ஒரு சூரியன்
தி இந்து நாளிதழ் தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதி வசனகர்த்தா எழுத்தாளர் முன்னாள் முதல்வர் என பல முகங்களை கொண்ட ஒரே ஆளுமை திரு கருணாநிதி அவர்களின் பொது சேவையை பொருட்டும் திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு பணிகளைத் தொட்டு நினைவுகூரும் வகையிலும் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” நூலினை வெளியிட்டு உள்ளனர்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு… இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை.
இந்த நூல் குறித்து தி இந்து நாளிதழ் ஆசிரியர்கள் கூறும்பொழுது, ஜனநாயக நாடு ஒன்றில் 60 ஆண்டு காலம் தொடர்ந்து மக்களால் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு, அதுவும் சாதி ஆதிக்க இந்திய அரசியலில் ஒரு அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து, இப்படி சாதித்த வரலாறு கருணாநிதியை அன்றி யாருக்கும் இல்லை. ஆக, இந்த முக்கியமான தருணத்தில் அவருடைய பங்களிப்பைப் பேசும் நூல் ஒன்றை ஏன் நாம் கொண்டுவரக் கூடாது என்ற கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதில்தான் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம்! கூடவே, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பின்னணியையும் திமுக, அதிமுக இரு கட்சிகளின் ஆட்சியிலும் தமிழகத்தில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களையும் இந்நூலில் தொட்டிருக்கிறோம்.
கருணாநிதி என்னும் ஆளுமை குறித்து அவரது அருகிலே இருந்து அவரை பார்த்து ரசித்தவர்களின் நேர்காணலின் மூலமாக தந்திருப்பது மிக சிறப்பு. வருங்கால இளம் தலைமுறைகள் திராவிட கட்சிகளும் கருணாநிதி அவர்களும் ஊழலை மட்டுமே செய்தார்கள் என்கிற பொய்யை மறுக்கவும் திராவிட இயக்கங்களின் சாதனைகளையும் அதில் கருணாநிதியின் பங்கினையும் அறிய இந்நூல் உதவும்.
Download/Buy : Therkilirunthu Oru Sooriyan தெற்கிலிருந்து ஒரு சூரியன்
Pingback:புத்தகம் : குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி ? (Goal Setting ) – பாமரன் கருத்து
Pingback:கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம் - என் ராம் எழுதிய கட்டுரை – பாமரன் கருத்து