தெய்வம் என்பதோர் புத்தகம் | தெய்வங்கள் பற்றி கள ஆய்வு செய்து எழுதி இருக்கிறார் தொ.பரமசிவன்
ஒவ்வொருவருக்கும் குல தெய்வம் என்பது உண்டு. மக்கள் பண்பாட்டினை அறிய வேண்டுமெனில் அவர்கள் வணங்கும் தெய்வங்களை குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தொ.பரமசிவன், தெய்வங்கள் பற்றிய கள ஆய்வுகளை நடத்தி பல உண்மைகளையும் காரணங்களையும் சுவாரஸ்யமாக தந்துள்ளார்.
“தெய்வமென்பதோர் சித்த முண்டாகி” என்னும் திருவாசக அடியில் இருந்து பெறப்பட்டது தான் இந்த நூலின் தலைப்பு. தாய்தெய்வ வழிபாடு என்பது நம் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. தந்தை தெய்வத்தை விடவும் தாய்த் தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகிறது. பெயரளவில் மட்டுமே வேறுபட்டு இருந்தாலும் தனித் தன்மையுடன் அவை நிலைத்து நிற்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள தாய்த் தெய்வங்கள் பற்றிய கட்டுரை மிகவும் ஆச்சரியம் அடைய வைக்கும். அவைகளின் பெயர்கள் வழிபாட்டு முறை என அதில் உள்ள தகவல்கள் அதிகம்.
வடக்கு நோக்கி தாய் தெய்வங்கள் ஏன் ஆயுதங்களுடன் இருக்கின்றன என்பது விளக்கப்பட்டுள்ளது. “நீலி கண்ணீர்” வார்த்தையின் வரலாறும் இதில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில்.
வள்ளி முருகன் உடன் எவ்வாறு தெய்வானை வந்து சேர்ந்தால், அதன் பிறகு வள்ளியின் நிலை என்ன என்பதும் பேசப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் :
தாய்த் தெய்வம்
பழையனூர் நீலி கதை
உலகம்மன்
வள்ளி
சித்திரகுப்தன்
ஒரு சமணக் கோயில்
தமிழக ஆன்மிக வரலாற்றில் வள்ளலார்
ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்
பண்பாட்டுக் கலப்பு
சடங்கியல் தலைமையும் சமூக அதிகாரமும்
மரபும் மீறலும் – சாதி சமய அரசியல் பின்னணி
பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்
இந்தியத் தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத்தின் பங்கு
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பக்தி இலக்கிய ஆய்வுகள்
சமய நல்லிணக்கம் – பெரியாரியப் பார்வையில்
நாட்டார் தெய்வங்கள் நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்துகிறார். தாய் தெய்வங்கள் யாவை? அவற்றின் வழிபாட்டு பரிமாணங்கள், வட்டாரத்திற்கேற்ப மாறுபடும் பெயர்கள்., அவை எவ்வகையில் நிறுவனமயமாக்கபட்டன என்று பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். உலகம்மன் என்ற பெயரில் வாழ்வரசியாக வாழ்ந்த பெண்களை வழிபடும் முறையும் பல சான்றுகளுடன் தெரிவிக்கிறார்.
வள்ளி என்ற தலைப்பில் நாட்டார் மரபில் இளமைக்கும் துடிப்புக்கும் அடையாளமாக இருந்தவள் வள்ளி. முருகனின் இரண்டாம் மனைவி என்ற கூற்றை சான்றுடன் எதிர்க்கிறார். சித்ரகுப்தன் வடபுலத்திலிருந்து தமிழகம் வந்த தெய்வம் எனவும், நாட்டார் மரபில் இறப்பினை முன்னிறுத்தி நியாயகனக்கு பார்க்கும் தெய்வமாக பார்க்கபடுகிறார்.
சமண மதம் அழிந்த போதிலும் இன்றும் பல இடங்களில் தாய் தெய்வகோயிலாக மக்களால் பேணப்படுகிறது. தமிழக வரலாற்றில் வள்ளலார் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆண்டாள் பாடல்களைக் கொண்டு ஆரியர், திராவிடர் பண்பாட்டு கலப்பினை விவரிக்கிறார். சடங்குகள் நடைபெறும் இடங்களில் சடங்கியல் தலைமை இன்னும் நாட்டவர்களையே சாறும் என்றும் வைதீகரை சாராது. கோயிலில் வைதீகர்களை உள்ளே விட்டு நாட்டவரை வெளியில் நிறுத்துவது மரபு மீறப்பட்டதால் ஏற்பட்டது என குறிப்பிடுகிறார்.
பெரியார் அதிகாரமயமாகிய கோயில்களையும் அதனை மையப்படுத்திய ஏற்றத்தாழ்வுகளையே சாடினார். மாறாக நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை. பேரா. கா. சிவதம்பியின் பக்தி இலக்கியங்கள் குறித்த ஆய்வு தமிழகத்தில் சமய இலக்கிய ஆய்வுகள் வளரவில்லை என்று கூறியுள்ளார்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்