மறக்கப்பட்ட தியாகி : அஞ்சலை அம்மாள் – ஜெயிலில் பிறந்த ஜெயவீரன் : ராஜா வாசுதேவன்

சுதந்திர போராட்டத் தியாகிகள் யார் என வளரும் தலைமுறைகளிடம் கேட்டால் காந்தி என ஆரம்பித்து பிரபல்யமான சில பெயர்களை சொல்லுவார்கள். அதில் நிச்சயமாக கடலூர் அஞ்சலை அம்மாள் என்ற பெயர் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் அவரைப்பற்றிய பெரிய அளவிலான பதிவுகளோ புத்தகங்களோ எங்கும் இல்லை என்பது தான். அந்தக்குறையை போக்குவதற்கு ஊடகத்துறையில் சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த திரு ராஜா வாசுதேவன் பெரும் முயற்சி எடுத்து கடலூர் அஞ்சலை அம்மாள் என்கிற மிக முக்கியமான சுதந்திரபோராட்ட வீராங்கனையின் வரலாற்றை நாவல் வடிவில் தந்திருக்கிறார்.

Read more