மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும் என்ற கருத்தை விதைக்கிறது மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம்

Read more

“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.

Read more

மாபெரும் சபைதனில் புத்தகம்… உதயச்சந்திரன் ஐஏஎஸ் எழுதிய சிறந்த புத்தகம்

எத்தனை பெரிய உயர் பதவியும் மக்களாட்சியில் மக்களுக்காகப் பணியாற்றக் கொடுக்கப்படுவதுதான். மாவட்ட ஆட்சியர் பணி என்பது ராஜபாட்டையில் கம்பீரமாகப் போவதல்ல; மக்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களின் முகங்களை மலரவைப்பதற்கான பணியாகும் என்று நன்கு உணர்ந்தவர் உதயச்சந்திரன் என்பதை, அவரின் பணி அனுபவங்களில் இருந்து அறிய முடிகிறது. தான் ஆட்சியராகப் பணிபுரிந்த மாவட்டங்களில் ஆற்றிய பணிகள் குறித்தும், தான் பொறுப்பேற்ற துறைகளில் எடுத்த முன்னெடுப்புப் பணிகள் பற்றியும் அதன்மூலமாக தனக்கேற்பட்ட அனுபவப் பாடங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

Read more

கடவுளைப் பார்த்தவனின் கதை புத்தகம் வாசியுங்கள்

கடவுள் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவரும் இந்த காலகட்டத்தில் உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது லியோ டால்ஸ்டாய் எழுதிய “கடவுளைப் பார்த்தவனின் கதை” என்ற புத்தகம். நீங்களும் வாங்கி வாசித்து மகிழலாம். இரண்டு வயதான பெரியவர்கள் புனித தலமான ஜெருசலம் நகரத்துக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்பதை நீண்டநாள் ஆசையாக வைத்திருந்தார்கள். எஃபிம் ஒரு பணக்காரர். எலிசா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். எஃபிமும் எலிசாவும் எப்போது பேசிக்கொண்டாலும் ஜெருசலம் போவதைப் பற்றி பேசுவார்கள். எப்படியேனும் அங்கே போய்விட வேண்டும் என்பது அவர்களது வாழ்க்கையின் லட்சியம் என்றே கூறலாம்.

Read more