வேரில் பழுத்த பலா – படிக்க வேண்டிய புத்தகம்

சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த படைப்பு.

Read more

“உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” புத்தகம் வாசித்துவிட்டீர்களா? | The Happiest Man on Earth

எழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய  ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் சக மனிதனை இவ்வளவு மோசமாக நடத்திட முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்பதை நிரூபித்து இருக்கும் ஹிட்லரின் வதை முகாம்கள். அப்படிப்பட்ட கொடுமையான, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான வதை முகாமில் இருந்து யாரேனும் தப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒருவர் தப்பித்து இருந்தால் அவரால் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் தான் “The Happiest Man on Earth” என்ற புத்தகம். இதனை தமிழில் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் எடி ஜேக்கூ” என மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

Read more

பங்குச்சந்தை பற்றிய அறிய சூப்பர் புத்தகம் : அள்ள அள்ளப் பணம் – சோம.வள்ளியப்பன்

ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே எதார்த்தம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்தால் பங்கு சந்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிய வேண்டியது அவசியம். அதற்கு சரியான புத்தகம் சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்.

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகம் : ஷெர்லாக் ஹோம்ஸ்ஸால் தீர்க்க முடியாத புதிர்

எழுத்தாளர் : மருதன்

விலை : ரூ 178

Read more

“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“காவல்கோட்டம்” புத்தகம் மதுரையின் 600 வருட வரலாறு | சு. வெங்கடேசன்

காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது இது மிகவும் ஒரு வித்தியாசமான முயற்சி. 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் “காவல் கோட்டம்”.

Read more

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

Read more

மண்டியிடுங்கள் தந்தையே : எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் | Mandiyidungal Thandhaiye

Mandiyidungal Thandhaiye –
ஒரு மகன் தனது தந்தையை மண்டியிட சொல்லி கேட்க்கும் சூழல் வருமாயின், அந்த தந்தை எந்த அளவு பெரிய, மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்க வேண்டும். வருமானம் ஈட்டாமல் இருந்தர்க்காகவோ, பொறுப்பற்று திரியும் தந்தையை பார்த்தோ இந்த கேள்வி எழ வாய்ப்பில்லை. நிச்சயம் ஒரு துரோகத்தை அல்லது சமுதாயத்தால் துரோகம் என்று கட்டமைக்கப்பட்ட ஒன்றை அவர் செய்திருப்பின் இது நடந்திருக்கும் .

ஆம் இது ரஷ்ய எழுத்தாளர் மேதை லியோ டால்ஸ்டோய் அவரது வாழ்கையின் ஒரு பகுதி.

Read more

“கடவுள் கற்ற பாடம்” புத்தகம் வாசிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு | சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர்

கடவுள்களின் படைப்புத் தொழிலை இளம் கடவுளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? அவர்களுக்கு வெற்றி, தோல்வி, மன உளைச்சல், மானம், அவமானம் எல்லாவற்றையும் கடவுள் என்பவர் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலப் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வேடிக்கையாகக் கூறி பிரபஞ்ச இயக்கத்தின் ரகசியத்தை அங்கத நடையோடு ஒரு வாசகனை அதுவரையில் எதார்த்த கதைகளில் மூழ்கியிருந்த நிலையிலிருந்து புதிய திசையை நோக்கி ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை இச்சிறுகதை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

Read more

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் : வ.உ.சிதம்பரம்பிள்ளை

மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும் வ.உ.சி யும் மாமன் மச்சான் என்ற அளவிற்கு நெருக்கமானவர்கள் என்பது வ.உ.சிதம்பரம்‌ எழுதிய ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிந்தது.
பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயரும், வ.உ.சிதம்பரத்தின் தந்தை வ. உலகநாத பிள்ளை இருவருமே நண்பர்கள். ஆதலால் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.

Read more