அறியப்படாத தமிழகம் தொ.பரமசிவன் | Ariyappadatha Tamizhagam PDF Download

‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் சிறப்பம்சம். நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பல எளிய விசயங்களாக நீங்கள் கருதிக்கொண்டு இருந்தவற்றிற்கு பின்னால் இருக்கும் நுண்ணிய வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள 168 பக்கங்களைக் கொண்ட அறியப்படாத தமிழகம் என்ற புத்தகம் பல்வேறு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ 67 முதல் நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கலாம்.

Read more

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் : வ.உ.சிதம்பரம்பிள்ளை

மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும் வ.உ.சி யும் மாமன் மச்சான் என்ற அளவிற்கு நெருக்கமானவர்கள் என்பது வ.உ.சிதம்பரம்‌ எழுதிய ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிந்தது.
பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயரும், வ.உ.சிதம்பரத்தின் தந்தை வ. உலகநாத பிள்ளை இருவருமே நண்பர்கள். ஆதலால் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.

Read more