சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | சாகித்ய அகாடமி விருது வென்ற அம்பையின் புத்தகம்


அம்பை அவர்கள் எழுதியிருக்கும் “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” அனைவரும் படித்துத் தெளிய வேண்டிய ஓர் அற்புதமான புத்தகம். இந்தப் புத்தகத்தை  வாசித்து பலர் சமூக வலைதளங்களில் தங்களது மேலான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றின் தொகுப்பே இந்தப்பதிவு.

 

நூல்: சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

ஆசிரியர்: அம்பை

பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள்: 244

விலை: Rs. 195/

 

அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் இவர். பொதுவாக அங்கீகாரம் குறித்தோ பேட்டிகள், விருதுகள் குறித்தோ கவலைப்படாதவர் அம்பை.

அம்பைக்கு முன்னும் பின்னும் பெண்கள் பலர் எழுதாமல் இல்லை. ஆனால், அம்பை எல்லாவற்றிலுமிருந்து விலகித் தனித்துவப் பாதையைத் தேர்ந்துகொண்டவர். பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார். 

 

ஆனால், பார்வை வேறு; கோணம் வேறு. சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் அவர் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டவோ கோரவோ இல்லை. ஆனால், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாகச் செயல்படுத்தினார்.

 

அறுபதுகளின் பின்பகுதியில் பெண்களுக்குப் பளீரென்ற விடியல் வாய்த்துவிடவில்லை. சமையல் குறிப்புகளை எழுதுவதும் குடும்பச் சித்திரங்களை வாசிப்பதும் பெரும் சாதனையாகக் கருதப்பட வேண்டிய சூழலில்தான் சி.எஸ். லஷ்மி, அம்பையாக மாறிய வெளிப்பாடு நிகழ்ந்தது. குடும்பச் சித்திரங்களுக்குள் புதைந்திருந்த பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியவர்களும் அதில் மீறலை நிகழ்த்தியவர்களும் உண்டுதான் என்கிறபோதும் நவீன இலக்கியத்தில் அம்பை நிகழ்த்திய உடைப்பு முக்கியமானது.


சில கதைகள் பற்றி….


 

தொண்டை புடைத்த  காகம் 

 

தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையப்படுத்தியது.இவளது தந்தை சாப்பாட்டுப் பிரியர்.அவரின் இறப்பிற்கு பின் அவள் வீட்டிற்கு வரும் தன் தந்தையைப் போலவே உண்பதாக நினைக்கிறாள்.பிரிந்துப் போன பல இழைகளை இழுத்துவந்த காகம்.காலத்தால் கடந்த்தைச் சிறு நெருப்புப் பொறிகளாய் மனதில் ஊதிய காகம்.அம்மா,அப்பா,பாட்டி,காதலின் கணங்கள் என எல்லாம் கயிறாக முறுக்கிக் கொண்டு அவளை விளாசுவதுபோல அந்தக் காகத்தின் கரைதலில் உணர்ந்தாள்.கோபத்தின் உச்சத்தில் காக்கையை விரட்டிவிட்டாள்.

 

சாம்பல் மேல் எழும் நகரம்

 

ஊர்மிளாவின் தற்கொலையுடன் தொடங்கும் கதை.பழைய கட்டடங்களை இடித்து பல அடுக்குமாடிகட்டிடங்கள் கட்டப்படுகிறது.சால்களை எரித்தும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.பழைய நினைவுகளை கூறும் கம்லி.மும்பை நகரின் தாதர்,கிரன்காவ்,துல்சிபைப் தெரு,ஜே.ஜே தாவுபாலம்,மும்பைசா லாவணி கவிதை என வலம் வரும் கதை.

கண்டவப் பிரஸ்தம் இந்திரப் பிரஸ்தமாக எழும்பியது..

வனங்கள் நகரமானது என முடிக்கிறார்.

 

பயணம் 21

 

காமும்மா என்ற நடனப் பெண்மணி தன் மகள் அனன்யாவின் உதவியுடன் தான் எழுதிய புத்தகத்தை தேடிய பயணம் இது.


 

வீழ்தல்

 

மனத்தில் பெஹாக் ராகம்.புரந்தரதாசரின் ” நானேக்கே படவனு நானேக்கே பரதேசி” பாடலுடன் தொடங்கும் சத்யா,கமலாவின் கதை. “எப்போது நாம் பிறக்கிறோம்?ஏன் வாழ்கிறோம்? எங்கு முடிவில் அமைதியுறுகிறோம்? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் முதல் சுலோகம் (ஜீவாம கேன) ஏன் வாழ்கிறோம்?

வயதாகிவிட்டால் காலவதியாகிவிடுகிறோம் என்று தன்னை மாடியிலிருந்து சரிந்துக்கொண்டு வீழும் பெண் இவள்.( உண்மைதான் போல) 

 

சிவப்புக் கழுத்துடன்  ஒரு பச்சைப் பறவை

 

மௌனத்தில் வாழும், பிறவியில் இருந்தே செவியால் கேட்க இயலாத குழந்தைகள், பிறர் பேசும்போது ஏற்படும் உதட்டசைவுகளை வைத்து ,செவிக் கருவியின் உதவியுடன் பேசக்கற்று கொள்ளல், சைகை மொழி மூலம் கண்களால் காண்பதை வெளிப்படுத்துவது, இதில் எது சிறந்தது, பெற்றவர்களின் மன உணர்வுகள்,எனஒரு வித்தியாசமான கதை!

 

              வசந்தன்,அவனின் மனைவி மைதிலி, குழந்தை இல்லாத, அவர்களின் நாற்பத்தைந்து,நாற்பது வயதில் அவர்கள் வாழ்வில் நுழையும் குழந்தை தேன் மொழி!வளர,வளர அந்த குழந்தைக்கு செவிப்புலன் இல்லை என்று தெரிந்தது. வசந்தன் இடிந்து போய் விட்டான்.மருத்துவ அறிவுரையின் படி ,செவிக்கருவி  பொருத்தப்பட்டது!பொருத்தப்பட்ட அன்று  அந்த குழந்தை துடித்து, கதறியது.காரணம் அந்த கருவி மூலம் ,எந்த பாகுபாடும் அன்றி,அருகாமை,தூரம் என்ற வித்தியாசமில்லாது வந்த ஒலிகள்!அதை காதில் வைத்து பார்த்து ,அந்த ஒலி தாக்குதலை தாங்க இயலாது கதறினான் ,தன் குழந்தைக்கு தேன்மொழி என பெயர் வைத்த அந்த தகப்பன்!

 

         தேன் மொழி வளர்ந்தாள் .செவிக்கருவியின் உதவியுடன்,உதட்டு அசைவுகளை வைத்து, பேச ஆரம்பித்தாள்!சிறப்பு பள்ளியில் சேர்ந்து,படித்த அவள் சைகை மொழியும் கற்று கொள்ள ஆரம்பித்தாள்.ஆனால் வசந்தனுக்கு அதில் விருப்பம் இல்லை!எட்வின் என்ற பையன் தேன் மொழியின் பள்ளி தோழன்.இருவரும் சைகை மொழியில் தான் உரையாடிக் கொள்வர்.இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தனர்.இதிலும் வசந்தனுக்கு விருப்பமில்லை!காக்ளியர் சிகிச்சை தேன்மொழிக்காக ஏற்பாடு செய்தான்.அதை மேற்கொள்ள தேன் மொழி விரும்ப வில்லை!மேலும் அவள் எழுதிய கடிதம் வசந்தனை யாரும் அறியாமல்,வீட்டை விட்டு போக வைத்தது!அம்மாவும் மகளும் தேடிச்செல்கின்றனர்!என்ன நடந்தது என கதை எதிர்பாராதவிதமாக போகிறது!

 

                 தேன்மொழி எழுதிய அந்த கடிதமாக  இல்லாமல் ஒரு கவிதை போல இருந்தது

நானும் எட்வினும்   ஒரு மௌன உலகில்  வாழ்கிறோம் !ஒரு ஒல்லியில்லாத உலகம் அது!செவிக்கருவி மூலம் வரும் ஒலிச்சொட்டுகள் சூடானவை!நெருப்பை போன்று சுடுபவை!எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு!காட்சிகள் உண்டு!சிகப்பு,பச்சை,நீலம்,ஆகாயம்,கரு நீலம்,மென் நீலம் இவை நினைவில் கொண்டு வரும் வான் கோவின் படுக்கையறை ஓவியங்கள்!ஒவ்வொரு நிறமும் ஒரு ஓவியத்தை நினைவு படுத்தியபடி!ஒலி ஓர் ஆக்கிரமிப்பு!மௌனம் ஒரு கடல்!ரகசியங்கள் நிறைந்த ஆழ்கடல்!நாங்கள் அந்த கடலுடன் இணைந்த திமிங்கலங்கள்!எங்களை வெளியே இழுத்து வந்து ஒரு தொட்டியில்  போட்டால் உயிருடன் இருப்போம்!காட்சிப் பொருளாக!ஆனால் இறந்திருப்போம்! அவர்கள் இருவரும் விரும்புவது சைகை மொழி நிறைந்த மௌன உலகில்!இது அவர்களின் பார்வை!இது தான் கதையின் கருவும் கூட!

 

இது கதையின் பின் குறிப்பு!

 

                 #டெலிபோனை கண்டு பிடித்த கிரகாம் பெல் ,சைகை மொழி,வாய்பேச்சு இதில் சிறந்தது எது செவிப்புலன் குறைந்தவர்களுக்கு என்ற விவாதம் தான்.இது இன்றும் தொடர்கிறது.காது கேளாதோர் கண்டிப்பாக ,பேசி கல்வி கற்றால் தான் சமுதாயத்தில் சம நிலை அடைய முடியும்.சைகை மொழியால் அந்த இடத்தை அவர்கள் அடைய இயலாது என்பது அவரது முடிவு.மேலும் காது கேளாதவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்ய கூடாது.அப்போது தான் குறைபாடு உள்ள சந்ததியினர்  வரும் வாய்ப்பு குறைவு என்றார்.#சைகை மொழியில் பள்ளிகளில் கற்பித்தல் தடை செய்ய வேண்டும்!பேச்சு மூலம் தான் கற்ப்பிக்க வேண்டும் என காது கேளாதோருக்கான மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது! 

      

மொழி ஒரு தொடர்பு! ஒலி இல்லாமலும் அது நேரலாம்.

வில் முறிமாத சுயம்வரங்கள்

 

இரண்டுப் பிள்ளைகள் தனது வயதான அம்மாவிற்கு இனிவரும் காலங்களில் அவளைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என்று முடிவெடுத்து அம்மாவை திருமணம் செய்துகொள்ள கேட்பார்கள். அது சரியா!? தவறா!? இந்த வயதில் துணை அவசியமா இல்லையா!? என்பதைப் பற்றிய சிறிய கதை. நல்லா இருக்கும். படித்துப் பாருங்கள்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *