சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது சமூகவலைதளங்களை பயன்படுத்தி நாம் வாழ்வில் சாதரணமாக எடுக்க கூடிய முடிவுகளில் (எந்த பொருள் வாங்கலாம் , எந்த ஹோட்டலுக்கு செல்லலாம் etc) ஆரம்பித்து அதிகபட்சமாக நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் கூட மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் .
facebook நிறுவனர் மார்க் தகவல் கசிந்தது உண்மைதான் , அதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் , இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என கூறிவிட்டார் .
சரி எப்படி ஏற்படுத்துகிறார்கள் என பார்ப்போம் .
கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் facebook நிறுவனத்திலிருந்து லட்சக்கணக்கான நபர்களின் அனைத்து தகவல்களையும் திரட்டும் .
அந்த தகவலில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட் , லைக்ஸ் , ஷேர்,நீங்கள் இணைந்துள்ள பக்கங்கள் , உங்களது நண்பர்கள் என அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும் .
அந்த தகவல்களை வைத்துக்கொண்டு தங்களிடம் உள்ள சாப்ட்வேர் மூலமாக யாரெல்லாம் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் , யாரையெல்லாம் நமக்கு பணம் கொடுத்த கட்சிக்கு வாக்களிக்க வைக்க முடியும், யாரையெல்லாம் மாற்றி வாக்களிக்க செய்ய முடியாது என ஆராய்ந்து பார்ப்பார்கள் .
நபர்களை இனம் கண்டு பிரித்துவிட்ட பிறகு அவர்களின் முதல் டார்கெட் , கொஞ்சம் முயன்றால் தங்களுக்கு வாக்களிக்க வைக்க முடியும் என நம்புபவர்களே .
அந்த நபர்களுக்கு அனாலிட்டிக்கா நிறுவனம் தாங்கள் யாருடன் ஒப்பந்தம் வைத்திருக்கிறார்களோ அந்த கட்சியின் சிறப்புகள் குறித்த போஸ்ட்கள் அடிக்கடி தோன்றுமாறு பார்த்துகொள்வார்கள் .
அதோடு சேர்த்து எதிர்க்கட்சியினர் குறித்த வெறுப்பான தகவல்களை காட்டுமாறு பார்த்துகொள்வார்கள் .
உங்கள் நடவடிக்கைளை கண்காணித்து நீங்கள் அனாலிட்டிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட கட்சிக்கு வாக்களிக்கும் மன நிலைக்கு மாறிவிட்டிர்கள் என தெரிந்தவுடன் உங்களை டார்கெட் செய்வதை சற்று குறைத்துக்கொண்டு அடுத்த நபருக்கு செல்வார்கள் (அவர்களுக்கு வெற்றி).
ஒருவேளை எவ்வளவு முயன்றும் நீங்கள் மாறவில்லையெனில் அவர்கள் அடுத்த நபருக்கு சென்றுவிடுவார்கள் .
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் க்கு ஆதரவாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது .
இந்தியாவை பொறுத்தவரை கடந்த நாடளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தற்போது பாஜக வென்ற நான்கு மாநில தேர்தலிலும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் பங்கு இருப்பதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது .
2014 இல் மோடி அலையை உருவாக்கியதிலும் 2G (1 .76 லட்சம் கோடி ) யை ஊதி ஊதி பெரிதாக்கி காங்கிரஸ் கட்சியை பெரிய தோல்விக்கு உள்ளாக்கியதிலும் இந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு பெரும்பங்கு இருப்பதாக தெரிகின்றது.
பொழுதுபோக்கு என நினைத்துக்கொண்டு நாம் பயன்படுத்திவரும் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி நம் முடிவுகளை அவர்கள் நிர்ணயிப்பது என்பது “ஐனநாயக பேராபத்து” .
நன்றி
பாமரன்