பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டம் என்றால் என்ன?

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் இறந்து போனால் அவர்களுக்கு ரூ 2 லட்சம் இன்சூரன்ஸ் தொகையாக கிடைக்கும். ஆனால் இதனை பெற குடும்பத்தார்கள் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்.


அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அரசின் பயனுள்ள பல திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். கடந்த பதிவில் ஏழை எளிய மக்கள் வங்கி பயன்பாடுகளை பெறுவதற்கு மத்திய அரசால் துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா திட்டம் பற்றி விரிவாக எழுதி இருந்தோம். இந்தப்பதிவில் ஏழை எளிய மக்கள் விபத்து போன்ற காரணங்களால் இறந்து போகும் போது குடும்பத்தினருக்கு ரூ இரண்டு லட்சம் கிடைக்கும் விதத்திலான இன்சூரன்ஸ் திட்டம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா [Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana] குறித்து விரிவாக பார்க்கலாம். 

இந்தியா ஏழை எளிய மக்களால் நிறைந்த தேசம். ஆகவே பலருக்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இருப்பது கிடையாது. இதனால் குடும்பத்தில் முக்கியமாக வருவாய் ஈட்டக்கூடிய ஒருவர் திடீரென இறந்துபோனால் ஒட்டுமொத்த குடும்பமும் நிலை குழைந்து போய்விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் 2015 ஆண்டிற்கான பட்ஜெட் உரையின் போது பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் குறித்து அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ பேசினார். பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த திட்டத்தை கொல்கத்தாவில் மே 09, 2015 அன்று துவங்கிவைத்தார். இந்த திட்டம் காப்பீடு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திட உதவியிருக்கிறது. 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

இந்திய மக்களில் 18 வயது முதல் 50 வயது வரைக்கும் உள்ள யார் ஒருவரும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். நீங்கள் வைத்திருக்கும் வங்கிக்கணக்கில் இருந்தே இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இணையலாம். ஆண்டு ஒன்றுக்கு ரூ 330 செலுத்தினால் போதுமானது. இந்த ஆண்டு சந்தாவை தானாகவே எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட வங்கிக்கு நீங்கள் அனுமதி அளிக்கும் ஒரு கடிதத்தை வழங்கினால் போதும் , அடுத்த அடுத்த ஆண்டுகளுக்கு அவர்களாகவே உங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆண்டு தோறும் மே 31 க்கு முன்னதாக உங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். பணம் எடுக்கப்பட்டுவிட்டால் இந்த இன்சூரன்ஸ் ஆனது ஜூன் 01 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரைக்கும் நீட்டிக்கப்படும். 

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைவதற்கு எந்தவித மருத்துவ சான்றிதழையும் நீங்கள் கொடுக்க வேண்டியது இல்லை. அதுபோலவே நீங்கள் 50 வயதிற்கு உள்ளாக எந்த வயதிலும் இந்த திட்டத்தில் இணையலாம். குறிப்பிட்ட நபர் ஏதேனும் ஒரு காரணத்தால் இறந்துபோனால் அவர் யாரை நாமினி [nominee] என குறிப்பிட்டுளாரோ அவர்கள் இழப்பீட்டு தொகை பெற விண்ணப்பித்து ரூ 2 லட்சம் பெற முடியும். 

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana கவனத்தில் கொள்ள வேண்டியவை

இந்த திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை நீங்கள் தெரிந்துகொண்டால் காப்பீட்டு தொகையை பெறுவதில் சிக்கல் இருக்காது. 

 

1. இன்சூரன்ஸ் எடுத்த நபர் இறந்து போனால் அடுத்த 30 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் தொகை பெற விண்ணப்பித்து இருக்க வேண்டும். இல்லையேல் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் ஏழை எளிய மக்கள். ஆகவே அவர்கள் 30 நாட்களுக்குள் விண்ணப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதேபோல, பல குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட நபர் இப்படி ஒரு திட்டத்தில் இணைந்து இருப்பதே தெரிவது இல்லை. ஆகவே அவர்கள் விண்ணப்பிக்கத் தவறிவிடுகிறார்கள். 

 

2. இரண்டாவது nominee. குறிப்பிட்ட நபர் இறந்து போனால் அந்த இன்சூரன்ஸ் தொகை யாருக்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டு வைப்பதே nominee. ஆனால் பலர் இதில் எந்த பெயரையும் வைப்பது இல்லை. இதனால், தாங்கள் தான் குடும்ப வாரிசு என்பதை நிரூபித்து தான் இந்த இன்சூரன்ஸ் தொகையை வாங்க வேண்டி இருக்கும். ஆகவே, உடனே இதை செய்திடுங்கள். 

 

3. இறப்பு சான்றிதழ், மருத்துவமனையில் கொடுத்த சான்றிதழ், இன்சூரன்ஸ் தொகை கட்டிய சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். 

 

4. குறிப்பிட்ட வங்கிகளை அணுகினால் அவர்கள் உதவுவார்கள். 

5. ஜன்தன் யோஜனா திட்டத்தில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் தானாகவே இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுவிடுவார்கள். ஆகவே, அவர்களும் தங்களது கணக்கில் இன்சூரன்ஸ்க்கு பணம் பிடிக்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ளுதல் அவசியம். அதுபற்றிய செய்தியை குடும்பத்தில் சொல்லிவைப்பதும் அவசியம். 

ஜன்தன் யோஜனா திட்டத்தில் வங்கிக்கணக்கு துவங்குவது எப்படி? பயன்கள் என்ன?

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *