Ponniyin Selvan PDF Download + Audio | பொன்னியின் செல்வன் Free Download

பொன்னியின் செல்வன் நூலை படிப்பதனால் வெறும் கதையை மட்டுமே நீங்கள் அறிய மாட்டீர்கள். கூடவே கல்கி அவர்களின் கற்பனை வளத்தால் கடந்த காலத்தில் நம் நிலம் எப்படி அழகாக இருந்தது என்பது பற்றியும் நம் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் நீங்கள் அறிவீர்கள். உதாரணத்திற்கு, பின்வரும் 5 வரிகளை படித்துப்பாருங்கள். பொன்னியின் செல்வன் நூலின் ஆசிரியர் கல்கி அக்காலத்திய தோற்றத்தை கண்முன்னே நிறுத்தியிருப்பார்.

Download/Buy : Ponniyin Selvan PDF

பள்ளி மற்றும் கல்லூரி புத்தகங்களைத்தாண்டி ஒருவர் படிக்க ஆரம்பிக்கும் போது அவர்களின் முதல் தேர்வாக இருப்பது ‘பொன்னியின் செல்வன்’ எனும் மாபெரும் இலக்கிய பெரும் நூல் தான். பொன்னியின் செல்வன் புத்தகம் 5 பாகங்களையும் சுமார் 2600 பக்கங்களையும் கொண்ட நூல். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்துக்கள் எந்தவித சுணக்கமும் இன்றி உங்களை முழுவதுமாக படிக்கச்செய்துவிடும்.

பொன்னியின் செல்வன் [Ponniyin Selvan] நூல் கல்கி அவர்கள் எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி அவர்கள் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. 

பொன்னியின் செல்வன் நூல் பின்வரும் 5 பாகங்களை உடையது. இதில் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் உள்ளன.

முதல் பாகம் – புது வெள்ளம்

இரண்டாம் பாகம் – சுழற்காற்று

மூன்றாம் பாகம் – கொலை வாள்

நான்காம் பாகம் – மணிமகுடம்

ஐந்தாம் பாகம் – தியாக சிகரம்

Ponniyin Selvan Book PDF Tamil Download

நீங்கள் ஒலி வடிவில் பொன்னியின் செல்வன் நூலை கேட்க வேண்டும் என்று விரும்பினால் பின்வரும் 5 பைல்களையும் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனை Extract செய்தால் .mp3 வடிவில் கணினி அல்லது மொபைல் போனில் பொன்னியின் செல்வன் கதையை கேட்டு மகிழலாம்.

Download Ponniyin Selvan Audio Part 1

Download Ponniyin Selvan Audio Part 2

Download Ponniyin Selvan Audio Part 3

Download Ponniyin Selvan Audio Part 4

Download Ponniyin Selvan Audio Part 5

பொன்னியின் செல்வன் நூலில் பின்வரும் முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவமும் சிறப்பு மிக்கதுமாக இருக்கிறது. பலருடைய மனதை கொள்ளை கொள்ளும் கதாபாத்திரமாக ‘பூங்குழலி’ இருக்கும். நீங்கள் படித்திருந்தால் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை குறிப்பிடுங்கள்.

வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்

அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்

ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்

குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,)

பெரிய பழுவேட்டரையர்

நந்தினி

சின்ன பழுவேட்டரையர்

ஆதித்த கரிகாலர்

சுந்தர சோழர்

செம்பியன் மாதேவி

கடம்பூர் சம்புவரையர்

சேந்தன் அமுதன்

பூங்குழலி

குடந்தை சோதிடர்

வானதி

மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)

கந்தமாறன்(சம்புவரையர் மகன்) கொடும்பாளூர் வேளார்

மணிமேகலை(சம்புவரையர் மகள்) அநிருத்த பிரம்மராயர் மதுராந்தக சோழர்

பொன்னியின் செல்வன் நூலை படிப்பதனால் வெறும் கதையை மட்டுமே நீங்கள் அறிய மாட்டீர்கள். கூடவே கல்கி அவர்களின் கற்பனை வளத்தால் கடந்த காலத்தில் நம் நிலம் எப்படி அழகாக இருந்தது என்பது பற்றியும் நம் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பது பற்றியும் நீங்கள் அறிவீர்கள். உதாரணத்திற்கு, பின்வரும் 5 வரிகளை படித்துப்பாருங்கள். பொன்னியின் செல்வன் நூலின் ஆசிரியர் கல்கி அக்காலத்திய தோற்றத்தை கண்முன்னே நிறுத்தியிருப்பார்.

“தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. “

ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய இந்நூல் புத்தக கண்காட்சிகளில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும். நீங்கள் அமேசான் போன்ற இணையதளங்களிலும் குறைந்த விலைக்கு வாங்கலாம். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *