பனி மனிதன் – சிறுவர்களுக்கான மொழியில் எழுதப்பட்ட அருமையான ஜெயமோகன் புத்தகம்



தனது 7 வயது மகனிடம் இந்த நாவலின் அத்தியாயங்களை கூறி அந்த சிறுவனுக்கு புரிந்தால் மற்ற குழந்தைகளுக்கும் புரியும் என்று சோதித்து இந்த நாவலை படைத்ததாக ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் கூறியுள்ளார்கள்.  இந்த நாவலும் படிக்க படிக்க அப்படியே இருப்பதாக இந்த நாவலை படித்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

இந்த புத்தகத்தை வாசித்துவிட்டு 7 ஆம் வகுப்பு படிக்கும் ரியா ரோஷன் என்கிற இளம் புத்தக வாசிப்பாளர் எழுதியுள்ள விமர்சனத்தை சமூக வலைதளத்தில் இருந்து எடுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். அவரது விமர்சனத்தை படித்து முடிக்கும் போது இந்த நாவலை நாமும் படிக்க வேண்டும் நமது குழந்தைகளுக்கும் இந்த நாவலை அறிமுகம் செய்திட வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது. 

பெயர் : ரியா ரோஷன்

வகுப்பு: ஏழாம்  வகுப்பு

வயது :12

இடம்: சென்னை

புத்தகம் : பனி மனிதன் 

ஆசிரியர் : ஜெயமோகன் 

பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் 

விலை: Rs.190

 

புத்தகத்தைப் பற்றி :

 

பொங்கல் விடுமுறையில் நான் படித்த புத்தகம் ‘ பனி மனிதன் ‘.

சின்ன குழந்தைகளுக்கான  fantasy கதை போல இல்லாமல் நிறைய யோசனை செய்ய வைத்தது.இது ஒரு Adventurous கதை. படிக்க ஜாலியாக இருக்கும்.மொத்தம் 215 பக்கங்கள்.44 chapters படிப்பதே தெரியாது போய்க்கொண்டே இருக்கும்.எளிமையான எழுத்துநடை.

Science, Geography, philosophy, spirituality, comedy  எல்லாம் கலந்த ஒரு  கதை.

கதை :-

 

பனி மனிதர்களை தேடும், கேப்டன் பாண்டியனின் journey தான் இந்த கதை.ஒரு டாக்டர் மற்றும் மலை வாழ் சிறுவன் கிம் இருவரும் அவருடன்  செல்வார்கள். பனி மனிதர்களை எப்படி சந்திக்கிறார்கள்? போகும் வழியில் சந்திக்கும் வித்தியாசமான உயிரினங்கள் , பனி மனிதர்களுக்கும்  நமக்கும் என்ன வித்தியாசம்?  பரிணாம வளர்ச்சி. இதையெல்லாம் விளக்குவதே இந்த கதை.


கதையில் எனக்கு பிடித்தவை

1. தத்துவம் :

 

இந்தப் புத்தகத்தில் நிறைய Philosophical facts இருந்தது. ஒவ்வொன்றையும் நான் குறித்து வைத்துள்ளேன்.

*தியானம் என்பது கண்களை மூடிக்கொண்டு நம் மனத்தில் ஓடும் எண்ணங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும். அப்படிக் கவனித்தால் மெதுவாக நமது எண்ணங்கள் ஒழுங்காக ஆகிவிடும். நம் மனம் மிகவும் அமைதி அடைந்துவிடும். இதை வெகு நாள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

 

பௌத்த மதத்தில் பல விதமான தியானப் பயிற்சிகள் உண்டு. அவற்றை பிட்சுக்கள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார்கள். அவற்றைத் தொடர்ந்து செய்யும் குழந்தைகளுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். பொறுமையும் அதிகமாக இருக்கும்.

 

2. ஞானம் உடையவர்களை எவ்வாறு அறிவது?

 

“வளர்ச்சி அடைந்த மனம் உடையவர்கள்தான் ஞானிகள். அவர்களுக்கு நான் என்ற உணர்வு இருக்காது. எனவே பேராசை இருக்காது. பேராசை இல்லாததனால் அவர்கள் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ள மாட்டார்கள். சொந்தமாக ஏதும் இல்லாமல் இருப்பதனால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது பயம் இருக்காது. எனவே பொறாமையோ கோபமோ அடைய மாட்டார்கள். எதை இழந்தாலும் அவர்களுக்குத் துக்கம் ஏற்படாது. அதாவது மனம் எப்போதும் அமைதியாக இருப்பவர் எவரோ அவர்தான் ஞானி”

 

3. அறிவியல்

 

•சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சியை easy ஆக விளக்கியிருந்தார்  .

*”மனிதனிலும் பரிணாம மாற்றம் நடைபெறுகிறது. ஆனால் மனிதனின் வாழ்நாள் அதிகம். அதனால் மாற்றம் தெரியப் பல ஆயிரம் வருடங்கள் ஆகும். நாற்பது கோடி வருடம் முன்பு பூமி மீது பலவகையான குரங்குகள் இருந்தன. அவற்றில் சில வகைக் குரங்குகள் வாழ்ந்த சூழல் மாறுபட்டது. பூமி மீது குளிர் குறைந்தபோது அவற்றின் உடலில் முடியும் குறைந்தது. மரங்கள் குறைந்தன. எனவே அவை அதிகமாகத் தரையில் நடக்க ஆரம்பித்தன. அதனால் படிப்படியாக அவற்றின் முதுகு நிமிர்ந்தது. அவை மென்மையான உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தன. எனவே அவற்றின் வாய் சிறியதாக ஆயிற்று. அதாவது, அவை படிப்படியாக மனிதனாக மாறின”

 

*சில குரங்குகளுக்கு உடல் வேகமாக மாறியது. சிலவற்றுக்கு மூளை வேகமாக வளர்ந்தது. வேகமாக மாறிய குரங்கு மனிதர்கள் மற்ற குரங்கு மனிதர்களைத் தோற்கடித்தார்கள். மனிதன் உருவான பிறகு மனிதர்கள் குரங்கு மனிதர்களைத் தோற்கடித்தார்கள். அவர்களைக் கொன்றார்கள். இப்படித்தான் மனிதர்களின் இனம் பூமி மீது எங்கும் பரவிப் பெருகியது. குரங்கு மனிதர்கள் படிப்படியாக இல்லாமல் ஆனார்கள்.”

 

•மண்டை ஓடை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .

*மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டு மனித இனத்தை ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு மண்டை ஓட்டியல் என்று பெயர்.

 

*மண்டை ஓட்டியல் நிபுணர்கள் மண்டை ஒட்டுக்குள் உருக்கிய ரப்பரை ஊற்றி உறைய வைப்பார்கள். பிறகு அதைப் பிரித்து எடுத்தால் அந்த உயிரினத்தின் மூளை மாதிரியே இருக்கும்.

 

4. Spirituality ( Buddhism ):

 

இந்த புத்தகத்தில் கிம் ஒரு மலை வாழ் சிறுவன். எப்போதும் புத்தரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பான். வழியில் நிறைய வைரங்களை அவன் பார்த்தாலும் எதற்கும் ஆசைப்பட மாட்டான்.கடைசியில் அவன் மகாலாமா வாக ஆகி விடுவான். இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் கிம்.

புத்தரைப் பற்றி இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள்.

 

5. ஏன் பனி மலையை  புத்தரின் மனம் என்கிறார்கள்?

 

“ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது”

 

6.ஒவ்வொரு chapter யிலும் ஒரு gk fact இருந்தது.ரொம்ப useful facts.

7.ராணுவ வீரர்கள் பழைய கடிதங்களை படித்து தங்கள் உறவினர்களை நினைப்பது,ராம பிதாகஸ்- ராமனின் வாலில்லா குரங்கு, மீண்டும் பிறக்கும் புத்தர்- மைத்ரேயர், கோயில்களில் காணப்படும் யாளி,வெற்றி தோல்வி இல்லாத போட்டி இல்லாத பனிமனித குழந்தைகளின் விளையாட்டு, மலத்திற்கும் சாணிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

மேலும் பல புத்தகங்களின் அறிமுக கட்டுரைகளை இங்கே கிளிக் செய்து வாசிக்கலாம்

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *