Site icon பாமரன் கருத்து

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம் / Marapachi Sona Ragasiyam மரப்பாச்சி சொன்ன ரகசியம் / Marapachi Sona Ragasiyam

மரப்பாச்சி சொன்ன ரகசியம் சுருக்கம் : ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும் என்ற கருத்தை விதைக்கிறது மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம்

Download/Buy : மரப்பாச்சி சொன்ன ரகசியம்

ஒருமுறை பாட்டி வீட்டிற்கு ஷாலினி செல்லும்போது அவருக்கு அவரது பாட்டி மரப்பாச்சி பொம்மையை கொடுக்கிறார். மிகவும் பிடித்துப்போன மரப்பாச்சி பொம்மையை எப்போதும் தன்னிடமே வைத்துக்கொள்கிறாள் ஷாலினி. ஒருநாள் ஷாலினி அவளது தம்பியுடன் பாடம் படித்துக்கொண்டு இருக்கும் போது மரப்பாச்சி பொம்மை பேசுகிறது. ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு பிடித்துப்போய் விடுகிறது. 

ஷாலினி ஒருநாள் பள்ளிக்கு செல்லும் போது அங்கே அவளது தோழி பூஜா சோகமாக இருக்கிறாள். ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டாலும் அவள் பதில் சொல்லவில்லை. பூஜா தன்னையும் அவளது வீட்டிற்கு போக முடியுமா என கேட்க, ஷாலினி பூஜாவை தனது வீட்டிற்கு அழைத்துபோகிறாள். வீட்டிற்கு வந்தாலும் கூட பூஜா பேசவே இல்லை.


பிறகு பூஜாவை பேச வைக்க தன்னிடம் இருக்கும் மரப்பாச்சி பொம்மையை கொண்டு வருகிறாள். இந்த மரப்பாச்சிகிட்ட  நீ உன்னோட கஷ்டத்தை சொல்லு அது உன் பிரச்சனையை தீர்க்க ஒரு வழி சொல்லும் என்கிறாள் ஷாலினி. மரப்பாச்சி பேசுவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூஜா பிறகு மெல்ல பேச ஆம்பிக்கிறாள். 

 

எனது அப்பா அம்மா வேலைக்கு போய்ட்டு வரவரைக்கும், கீழ் வீட்டுலதான் இருப்பேன்.  தாத்தாவும்,பாட்டியும் இருக்காங்க,அந்த தாத்தா  எனக்கு பிடிக்காத மாதிரி தொடுறார்,..

 அம்மா , அப்பா கிட்ட இதை சொன்னால்  உன்னை வீட்டுக்குள்ளே பூட்டி வச்சுடுவாங்க. அதனால் நான் செய்வதையெல்லாம் சொல்லாதே என தாத்தா மிரட்டுகிறார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிறாள் பூஜா. 

 

மரப்பாச்சியிடம் இந்த பிரச்சனைக்கு யோசனை கேட்கிறார்கள் ஷாலினியும் பூஜாவும். மரப்பாச்சி பூஜாவிடம் “நீ உனக்கு நடந்ததை உன் அப்பா அம்மாவிடம் தைரியமாக சொல், அவர்கள் உன்னை வீட்டிற்குள் பூட்டி வைக்க மாட்டார்கள்” என்று சொன்னது. பூஜா அவளது பெற்றோரிடம் தனக்கு நடந்ததை சொல்கிறாள். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை அறிய புத்தகத்தை வாங்கி படியுங்கள். 

 

இந்தப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கியமான கருத்து “குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவு வலுவாக நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும் என்பது தான். குழந்தைகள் தங்களுக்கு நடப்பதை பெற்றோரிடம் தைரியமாக பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு எதிராக எழக்கூடிய பல பிரச்சனைகளை தீர்க்க முடியும்”

குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்”



மேலும் நூல்கள் பற்றி படிக்க….

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Exit mobile version