இதற்க்கு முந்தைய பதிவுகளை படிக்காமல் இருந்தால் கிளிக் செய்து முதலில் படித்துவிடுங்கள்.
சில நாட்களுக்கு முன்பாக fridge ஒன்றினை வாங்கலாம் என நினைத்து இணையதளத்தில் விலை அல்லது பல்வேறு கம்பெனிகளின் fridge களை பார்த்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பிறகு நீங்கள் வாங்கியிருந்தாலும் வாங்காமல் விட்டிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது உங்களுக்கு fridge சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் காட்டப்பட்டால் அதற்க்கு காரணம் “Behavioral Targeting“.
ஒவ்வொரு இணையதளத்தின் அடிப்படை வருமானமே விளம்பரங்களை காண்பிப்பதன் மூலமாகத்தான் கிடைக்கின்றது. அப்படி இருக்கும் போது யார் இணையதளத்தை பார்த்தாலும் விளம்பரங்கள் அந்த ad slot இல் தோன்றவே செய்யும். வெறுமனே ஏதோ ஒரு விளம்பரம் காட்டப்படுவதற்கு பதிலாக இணையதளத்தை பார்ப்பவர்களுக்கு பயனுள்ள (அவர்கள் தேடிய ) விளம்பரங்களை காட்டுவதன் மூலமாக அவர்களை பொருள்களை வாங்க செய்ய முடியும். அதற்காகத்தான் Behavioral Targeting உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.
Behavioral Targeting எவ்வாறு செய்யப்படுகிறது?
Browser பயன்படுத்திடும் அனைவருக்குமே Cookies என்பது தெரியும். Cookies என்பது நாம் பிரவுசர் பயன்படுத்திடும் போது உருவாகக்கூடிய ஒரு சிறிய அளவிலான file. அதில் நம்முடைய விவரங்களும் நாம் பிரவுஸ் செய்வது சம்பந்தப்பட்ட தகவல்களும் [Page visits , Online Searches, etc] சேமித்து வைக்கப்படும். சில சமயங்களில் அவை தானாகவே அழிந்துவிடும் [Temporary] அல்லது நமது கணினியிலேயே சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமித்து வைக்கப்படும் Cookies இல் இருக்கக்கூடிய தகவல்கள் Behavioral Targeting செய்வதற்கு பயன்படும்.
Cookies மூலமாக Behavioral Targeting செய்வதென்பது மிக மிக ஆரம்ப முறை. தற்போது Digital Advertising இன் துல்லியத்தன்மையை அதிகரிக்க அதாவது தேவையான நபருக்கு குறிப்பிட்ட விளம்பரங்களை காட்டுவதற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய பங்காற்றுவது DMP (Data Management Platform)
DMP – Advertisers அதாவது buyers மற்றும் Publishers போன்றோர் இணையத்தை பயன்படுத்துகிறவர்களின் (Audience) தகவல்களை சேமித்து வைக்குமிடம் எனலாம்.
வெறுமனே நாம் பிரவுஸ் (browse) செய்யும்போது பெறப்படுகின்ற தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு Behavioral Targeting செய்யப்படுவது இல்லை. நாம் நமது மொபைல்களில் எவ்வாறு இயங்குகிறோம், நாம் என்னென்ன வாங்குகிறோம், ஆன்லைனில் இல்லாமல் நமது மொபைல் எண்ணை எந்த கடைகளிலாவது பயன்படுத்தினால் அந்த தகவலையும் கூட சேகரித்து Behavioral Targeting செய்யப்படுகின்றது.
Behavioral Targeting இல் முக்கிய பங்காற்றும் சில Behaviours :
>> Which Page ? : நாம் எந்த மாதிரியான இணையதளங்களையும் இணையப்பக்கங்களையும் பார்க்கிறோம்
>> Interested page? : நாம் எந்த பக்கங்களில் அதிக நேரங்களை செலவிடுகிறோம் என்பதனை கண்காணித்து நமது விருப்பத்தை அறிதல்
>> Purchases : நாம் இதுவரை என்ன மாதிரியான பொருள்களை வாங்கியிருக்கிறோம், Cart இல் எதனை வைத்திருக்கிறோம்.
>> Searches : நாம் என்ன ‘Search’ செய்கிறோம் என்ற தகவல்களும் சேமிக்கப்படும்.
இவை மட்டுமல்லாமல் Mobile Activity , Offline activity போன்ற தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு தான் Behavioral Targeting செய்யப்படுகிறது.