விளம்பரம் என்றால் என்ன?
உற்பத்தியாளர் தன்னுடைய தயாரிப்பை மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களிடம் விற்பனை செய்வதற்காக செய்வதுதான் விளம்பரம்.
ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கட்ட பொருளின் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி அது பற்றி மக்கள் அறியாதவரையில் நிச்சயமாக அதனை வாங்க வாய்ப்பில்லை. அதற்காக செய்வது தான் விளம்பரம்.
கடந்த காலங்களில் விளம்பரங்கள் எவ்வாறு செய்யப்பட்டன?
பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய “விளம்பரம்” 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் துண்டு பிரசுரம் மூலமாகவும் செய்தித்தாள்களின் மூலமாகவும் வார மற்றும் மாதாந்திர இதழ்களின் மூலமாகவும் நடந்தன. பிறகு ரேடியோ, தொலைக்காட்சி என பரிணமித்த விளம்பர யுக்தி இன்று இணையதளங்களில் செய்யப்படும் டிஜிட்டல் அட்வர்டைசிங் வரை நீண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் இப்போது இருப்பதை போன்ற தொழில்நுட்ப கருவிகள் ஏதுமில்லை. ஓரிரண்டு வீடுகளில் ரேடியோ இருப்பதே அதிசயம் தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் இரவு நேரங்களில் கிராமங்கள் கிராமங்களாக சென்று பொருள்களை அறிமுகப்படுத்துவதும் புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் குறித்து கூறுவதும் நடந்தன.
துண்டுப்பிரசுரம்
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை துண்டுப்பிரசுரம் கொடுப்பது இருந்து வருகிறது. அப்போதெல்லாம் மாட்டுவண்டிகளில் வந்து துண்டு பிரசுரங்களை கொடுத்தும் தொண்டை கிழிய கத்தியும் புதிதாக வந்த திரைப்படங்கள் குறித்தோ அல்லது புதிதாக தொடங்கப்பட்ட கடைகள் குறித்தோ விளம்பரங்களை செய்வார்கள்.
சாலைகளில் பிளக்ஸ் வைப்பது
அதற்க்கு அடுத்தகட்டமாக சுவர்களில் விளம்பரங்கள் செய்வது , அனைவரும் வரும் பொது இடங்களில் பெரிய பெரிய பிளக்ஸ் போர்டு வைப்பது என விளம்பரம் செய்தார்கள் .
செய்தித்தாள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
மக்களின் வாழ்க்கைமுறையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதிகரித்த பின்னர் செய்தித்தாள் படிக்கின்ற பழக்கங்களும் ரேடியோ தொலைக்காட்சி பயன்பாடும் அதிகரித்தது. ஆகையால் உற்பத்தியாளர்கள் அதன் ஊடாக விளம்பரம் செய்ய தொடங்கினார்கள்.
இவை தான் சுருக்கமாக கடந்த காலங்களில் விளம்பரங்கள் செய்து வந்த முறைகள்.
இதனை தொடர்ந்துதான் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் இணைய பயன்பாட்டின் அதிகரிப்பினாலும் Digital Advertising துறை வளர்ச்சி பெற ஆரம்பித்தது.