காவிரி மைந்தன் Book PDF Download – அனுஷா வெங்கடேஷ்

If you searching for “Download Kaaviri Mainthan Book” then this is the right place to download this book. Here you can download kaviri mainthan three parts.

நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை முழுவதுமாக வாசித்தவராக இருந்தால் அதன் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் புத்தகத்தை வாசித்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்பாராத திருப்புமுனைகள் அடங்கிய கதைக்களங்கள் உங்களை வாசிக்கத் தூண்டலாம்.

காவிரி மைந்தன் Book PDF Download

பாண்டிய ஆபத்தூவிகள் சோழர் ஆட்சிக்கு தொல்லைகள் பல செய்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கடம்பூரில்  மறைந்த பிறகு சம்புவராயர் அரச குலத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஊரும் வளம் குன்றி போனது. கந்தமாறன் தன்னால் தான் பெரும் பழி தன் இனத்திற்கு வந்து சேர்ந்தது என்றும், தன் தங்கையின் மரணத்திற்கும் தான் காரணம் என்று எண்ணி கடம்பூரை விட்டு வராமல் அங்கேயே இருக்கிறான். ஆழ்வார்க்கடியான் கந்தமாறனின் மனதை மாற்றி தஞ்சைக்கு அழைத்து செல்கிறார். அங்கு சின்ன பழுவேட்டையர் தன் மூத்த மகளை மீட்டு வர அடியானையும், கந்தமாறனையும் கோடிக்கரைக்கு அனுப்பினார்.

கடல் கொள்ளைய ர்களை அடக்க சென்ற வந்தியதேவர் மற்றும் பொன்னியின் செல்வரும் வெகு நாட்களாக காணவில்லை. அவர்களை தேடும் பணி இப்பொழுது மாறன் வசம் வந்தது. அதே சமயம் வந்திய தேவரும் பொன்னியின் செல்வரும் ஒரு கொள்ளையர் தீவில் ஒதுங்கினர். அவர்கள் சென்ற கப்பல் சேதம் அடைந்தது. அங்கு ஒரு கூட்டம் இருவரையும் பிடித்து செல்கிறது. அவர்கள் வணிகர்கள். கடல் கொள்ளையரிடம் இருந்து தப்பி வாழ்பவர்கள். வந்திய தேவனையும், பொன்னியின் செல்வரையும் அடையாளம் கண்ட பிறகு அனைவருக்கும் இணைந்து கொள்ளையரை தாக்கத் தி‌ட்ட‌ம் தீட்டுகிறார்கள். கொள்ளையர்கள் பல நூறு பேர்கள், ஆனால் இவர்கள் விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அளவே. போர் நடைபெறும் சரியான நேரத்தில் சோழப்படை வ‌ந்து கொள்ளையரை கைது செய்கிறது. வந்திய தேவரும் பொன்னியின் செல்வரும் மீண்டும் சோழ தேசம் வருகிறார்கள்.

 கொள்ளையர் தீவில் பொன்னியின் செல்வன் கனவில் ஒரு அழகிய பெண் வருகிறாள். அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறார் அவர். வந்த இடத்தில் கந்தமாறனை வந்தியதேவர் கண்டு பூரிப்பு அடைகிறார். பழைய நண்பர்கள் ஒன்று சேர்கிறார்கள். பொன்னியின் செல்வன் மாறனிடம் தான் கண்ட கனவை பற்றி சொல்கிறார். அனைவரும் சோழ தேசம் செல்கிறார்கள். 

Click Here To Download/Buy

சின்ன பழுவேட்டையர் அரண்மனையில் அவரின் மகள் லோகா என்கிற லோகமாதேவிக்கு குந்தவை, வானதி, ராஜேந்திரன் மீது அலாதி பிரியம் ஏற்படுகிறது. பொன்னியின் செல்வன் நேரே பழுவேட்டையர் அரண்மனைக்கு வருகிறார். லோகா ஆரத்தி எடுக்கும் போது அவள் தான் தன் கனவில் வந்த பெண் என்று கண்டுகொள்கிறார். கந்த மாறனுக்கும் லோகாவிற்கும் ஏ‌ற்கனவே காதல் மலர்ந்தது உள்ளது. பிறகு பொன்னியின் செல்வன் ஊமை ராணிக்கு பல எதிர்ப்பை மீறி கோவில் கட்டுகிறார். அதற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று கோவில் கோபுரத்தின் உச்சியில் இருந்து பார்க்கும்போது ஊமை ராணி போலவே முழு உருவமாக ஒரு பெண் நிற்கிறாள். அதை கண்டு பொன்னியின் செல்வன் தலை சுற்றுகிறது. தன்னை அறியாமல் அவளை பின் தொடர்ந்து செல்கிறார்.

பிறகு என்ன நடந்தது,? பொன்னியின் செல்வம் ஒருதலைக்காதல் என்னவானது, லோகா மாறன் காதல் என்னவானது, ஊமை நாச்சியார் போல உள்ள பெண் யார்? இதல்லாம் அடுத்த இரண்டு பாகங்களில் வரும்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *