தோல்விகள், கவலைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் கவலையை பெரும் சுமையாக நினைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும். சரி, கவலை எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? இதோ சொல்கிறார் கண்ணதாசன்
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. அது மலையளவு
ஆகும் போது மனமும்
மரத்துப் போகும்..!
மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல தவறுகள்
செய்கிறோம்.. ஒரு
நொடிப்பொழுதில் விழும் அடி
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை..!
நான் என்று நினைக்காதீர்கள்
நினைத்தால்.. ஆண்டவன் தான்
என்பதைக் காட்டிவிடுவான்..!
செயல்படுவோம் நல்லதே நடக்கும்
என்ற பொது நம்பிக்கை இருந்தால்
வாழ்க்கை நிச்சயம் வளமடையும்..!
ஞானத்திற்கும் ஆணவத்திற்கும்
சிறு வித்தியாசம் தான்..
நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம்..
நம்மைத் தவிர ஏதுமில்லை என்று
நினைப்பது ஆணவம்..!
தேவைக்கு மேலே பொருளும்..
திறமைக்கு மேலே புகழும்
கிடைத்து விட்டால் பார்வையில்
எல்லாம் சாதாரணமாக
தான் தெரியும்..!
கட்டுக் காவல் எங்கே பலமாக
இருக்கிறதோ.. அங்கே தான்
தாண்டி குதிக்கும் கால்களும்
உறுதியாக இருக்கின்றன..!
அன்பிலே நண்பனை வெற்றி கொள்..
களத்திலே எதிரியை வெற்றி கொள்..
பண்பிலே சபையை வெற்றி கொள்..!
ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்..
ஒவ்வொரு இழப்பும் ஓர் லாபம்..
நம் ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர்
எச்சரிக்கை.. ஒவ்வொரு நட்டமும்
ஓர் பட்டறிவு.. ஒவ்வொரு காணாமல்
போதலும் ஓர் தேடல்..!
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி..
ஒரே தவறை திரும்ப திரும்ப
செய்பவன் மூடன்.. ஒரு தவறுமே
செய்யாதவன் மரக்கட்டை..
தன்னையறியாமல் தவறு செய்து..
தன்னையறிந்து திருத்திக்
கொள்பவனே மனிதன்..!
பணக்காரன் வீட்டுப் படியை
மிதிக்காதே.. அங்கே அவமானம்
காத்திருக்கிறது.. அழகான
உருவதைப் பார்த்து ஏங்காதே..
அங்கே ஆணவம் தலை
தூக்கி நிற்கிறது..!
எதிரி எப்போதும் எதிரியே..
நண்பன் தான் அடிக்கடி
பரிசீலிக்கப்பட வேண்டியவன்..!
பிறப்பால் தொடரும் உறவுகள்
அல்லாமல்.. பிணைப்பால்
தொடரும் உறவுகளே
உன்னதமானவை..!
நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை
ஏமாற்றாதே.. உன் வாழ்நாளில்
அதன் பலனை காண்பாய்..!
எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்..
வருவது மனதை
நிறைய வைக்கும்..!
காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள்..
அவை வீணடிக்கப்பட்டு விட்டால்
திரும்ப கிடைப்பதில்லை..!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்..
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!
முதல் தவறு மட்டும் அச்சத்தையும்..
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தரும்..
மன்னிப்பு கோரலுக்கு பயந்தே
பல தவறுகள் கருவிலேயே
இறந்து விடுகிறது..!
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல..
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பது தான் வாழ்க்கை..!
இரண்டு பக்கமும் கூர்மையுள்ள
கத்தியை கவனமாக
கையாள வேண்டும்..
இதே மாதிரி எந்தப் பக்கமும்
சேரக்கூடிய மனிதர்களோடு
கவனமாக இருக்க வேண்டும்..!
பரமசிவன் கழுத்தில்
இருந்து பாம்பு கேட்டது..
“கருடா சௌக்கியமா..?”
கருடன் சொன்னது
“யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால் எல்லாம்
சௌக்கியமே” அதில்
அர்த்தம் உள்ளது..!
எப்படி வாழ வேண்டும்
என்பதற்கு என் எழுத்தைப்
பாருங்கள்.. எப்படி
வாழக் கூடாது என்பதற்கு
என் வாழ்க்கையைப் பாருங்கள்..!
எப்படி எல்லாம் வாழக் கூடாதோ..
அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கேன்..
ஆகவே இப்படித்தான்
வாழ வேண்டும் என்று
புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை
எனக்கு உண்டு..!
( கவிஞர் கண்ணதாசன் )