தத்துவங்கள் என்றாலே கண்ணதாசன் என்பவர் நிச்சயமாக நம் நினைவில் வருவார். இதோ கண்ணதாசன் அவர்களின் புகழ்மிக்க தத்துவ வரிகள்.
ஒன்பது ஓட்டைக் குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன்.
அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்…!
– கவிஞர் கண்ணதாசன்
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
– கவிஞர் கண்ணதாசன்
நல்லவன் படகில் போகும் போது
துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டாள்
நதியே திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில்
கொண்டு போய்ச் சேர்த்துவிடும்..!
– கவிஞர் கண்ணதாசன்
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்.
– கவிஞர் கண்ணதாசன்
இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை
கவனமாக கையாள வேண்டும்.
இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய
மனிதர்களோடு கவனமாக இருக்க வேண்டும்..!
– கவிஞர் கண்ணதாசன்
நிரந்தரமானது துன்பம்.
வந்து போவது இன்பம்.
இதுதான் வாழ்க்கை என்பதை
தெளிவாக புரிந்து கொள்ள
வேண்டும்..!
– கவிஞர் கண்ணதாசன்
சிறகு கிடைத்தால் பறப்பது
மட்டும் வாழ்க்கையல்ல.
சிலுவை கிடைத்தாலும்
சுமப்பது தான் வாழ்க்கை…!
– கவிஞர் கண்ணதாசன்
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான்.
தணிப்பதும் தனிமை தான்…!
– கவிஞர் கண்ணதாசன்
ஞானத்திற்கும் ஆணவத்திற்கும்
சிறு வித்தியாசம் தான்.
நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம்.
நம்மைத் தவிர ஏதுமில்லை என்று
நினைப்பது ஆணவம்..!
– கவிஞர் கண்ணதாசன்
தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும்,
உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால்.
பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும்…!
– கவிஞர் கண்ணதாசன்
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!
– கவிஞர் கண்ணதாசன்
கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ,
அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும்
உறுதியாக இருக்கின்றன.
– கவிஞர் கண்ணதாசன்
ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது.
அதை எதிர்கொள்ளும் தைரியம்
வந்துதானே தீர வேண்டும்.
– கவிஞர் கண்ணதாசன்
கொக்கு பார்த்து கற்றுக் கொள்ளு
வாழ்க்கை என்ன என்பதை.
கொத்தும் போது கொத்திக் கொண்டு
போக வேண்டும் நல்லதை.
– கவிஞர் கண்ணதாசன்
கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று
கொக்கு கவலைப்படக் கூடாது.
மீண்டும் மழை காலம் வருகிறது.
மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது.
அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.
– கவிஞர் கண்ணதாசன்
குளத்திலே தண்ணியில்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்தபுள்ளே சொந்தமில்லே
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்குவெச்சா
சொந்தமில்லே பங்குமில்லே.
– கவிஞர் கண்ணதாசன்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்.
அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்.
அதில் எட்டடுக்கு மாடி வைத்துக் கட்டடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்…!
– கவிஞர் கண்ணதாசன்
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ.
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூட வரும் கூட்டம் கொள்ளை வரை வருமா?
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்கு தீனி கெட்ட பின்பு ஞானி…!
– கவிஞர் கண்ணதாசன்
ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன?
திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவது என்ன?
– கவிஞர் கண்ணதாசன்
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள்குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன்
அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்..!
– கவிஞர் கண்ணதாசன்
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை”
– கவிஞர் கண்ணதாசன்
ஆம் உண்மைதான் உங்களுக்கு அழிவில்லை. உங்கள் வரிகளில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றீர்கள்.