கண்ணதாசன் கவிதைகள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது!

 

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!