கண்ணதாசன் கவிதைகள்

தூங்காத கண்ணென்று ஒன்று

 

தூங்காத கண்ணென்று ஒன்று

துடிக்கின்ற சுகமென்று ஒன்று

தாங்காத மனமென்று ஒன்று

தந்தாயே நீ என்னைக் கண்டு

 

முற்றாத இரவொன்றில் நான் வாட

முடியாத கதை ஒன்று நீ பேச

உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட

உண்டாகும் சுவையென்று ஒன்று

 

யார் என்ன சொன்னாலும் செல்லாது

அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது

தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி

நம் காணும் உலகென்று ஒன்று

 

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் – உன்

விழி மட்டும் தனியாக வந்தாலும்

வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று

பெறுகின்ற சுகமென்று ஒன்று