கண்ணதாசன் கவிதைகள்

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

 

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த

தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை

தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

 

காலையில் நான் ஓர் கனவு கண்டேன் – அதை

கண்களில் இங்கே எடுத்து வந்தேன்

எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்

கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே

கண்களிலே கண்களிலே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

 

மனமென்னும் மாளிகை திறந்திருக்க

மையிட்ட கண்கள் சிவந்திருக்க

இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த

தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை

தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்