கண்ணதாசன் கவிதைகள்

சண்டைகளும், சமாதானங்களும்

“உன் கூட டூ”

என்று இரண்டு விரலை

சுட்டி காட்டி, துவங்குகிறது

பிள்ளை பிராயத்து சண்டைகள்.

 

கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே,

“உன் கூட பழம்” என்று

புன்னகைப்பூ பூக்க சமாதானப் பேச்சு…

 

பிள்ளை பிராயத்தில்

எல்லாமே

சுலபமாக தான் உள்ளது.

சண்டையானாலும் சரி,

சமாதானங்களானாலும் சரி…

 

வருஷக்கணக்காய்

பார்த்தும், பார்க்காமல்

போகும் முன்னாள் நண்பன்…

 

சோறாக்கியாச்சு –

சாப்பிட வரலாம்…

விட்டத்தை பார்த்து சொல்லும் மனைவி.

 

சிறிய கடனுதவி –

செய்ய மறுத்ததால்

முகத்தை தூக்கி

வைத்து கொண்டிருக்கும் சகோ…

 

எழுதும் எழுத்துகள்

கோணலாக இருந்தாலும் –

நேராக உள்ளது

பிள்ளை பிராயத்து சிந்தனைகள்.

 

வளர வளர எல்லாமே

வளர்கிறது…

மனஸ்தாபங்களும், பேதங்களும்…

அறிவு மட்டும் குறைவாக.

 

யாரிடமும்

சுலபமாக

 

சொல்ல முடியாமலே போகிறது –

“பழம்” என்று,