How to create Menu in WordPress?

Menu in WordPress 

ஒவ்வொரு இணையத்தளத்திலிலும் “Menu” என்பது நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் இருக்கும் “Main Menu” வை பாருங்கள், தலையங்கம் TNPSC போட்டி தேர்வுகள் …..மாணவர் பக்கம் என இருக்கிறது. நாம் இணையத்தில் பதிவிடும் போஸ்ட்களை பிரித்து அந்ததந்த பகுதிகளுக்கு “Menu” கீழே வைக்கும்போது வருகிறவர்கள் வேண்டிய பகுதியை கிளிக் செய்தால் அந்த செய்திகளை படிக்க முடியும்.

 

 

ஆகவே நீங்கள் இணையதளத்தை உருவாக்கிடும் போது உங்களுக்கு ஏற்றவாறு Menu வை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

Steps to Create Menu in WordPress :

தற்போது நான் “தலையங்கம்” என்கிற மெனுவை எவ்வாறு உருவாக்குவது என சொல்லி தருகிறேன்.

 

 

> முதலில் “தலையங்கம்” என ஒரு பக்கத்தினை “page” ஐ create செய்து கொள்ளுங்கள்.

 

> பிறகு “Page” க்கு கீழே “தலையங்கம்” பக்கத்தினை select செய்து “Add to Menu” வை கிளிக் செய்யுங்கள்.

 

 

> அல்லது நீங்கள் “Custom Links” ஆப்சனை கிளிக் செய்து URL இல் தலையங்கம் பக்கத்தினுடைய URL, Link Text இல் மெனுவின் பெயரை “தலையங்கம்” வைத்தும் create செய்யலாம்.

 

 

 

> இதேபோல “Categories” மற்றும் “Post” இல் உங்களுக்கு வேண்டியதை கிளிக் செய்து மெனுவை create செய்யலாம்.

 

> Sub Menu அதாவது ஒரு தலைப்பிற்கு கீழாக இரண்டு மூன்று தலைப்புக்களை வைக்க வேண்டும் என விரும்பினால் மேலே சொன்னபடி அந்த பக்கங்களை [இங்கே சுய முன்னேற்றம்] “Add  to Menu” மூலமாக இணையுங்கள். பிறகு படத்தில் காட்டியுள்ளபடி அந்த மெனுவை கிளிக் செய்து வலது புறமாக நகர்த்தி விட்டுவிடுங்கள். பார்க்கும் போதே உங்களுக்கு தெரியும் தலையங்கம் > சுய முன்னேற்றம்.

 

 

 

 

> நீங்கள் எத்தனை Menu மற்றும் Sub Menu க்களை உருவாக்கி கொள்ளலாம்.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *