Site icon பாமரன் கருத்து

சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது?

சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கரோனா வைரஸ் இதுவரைக்கும் 90,000 பேருக்கு பரவி இருப்பதாகவும் 3000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சீனாவில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் பெரிதும் உதவி செய்துவருவதாக கூறப்படுகிறது.
சீனாவில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழில்நுட்பம்

கரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 [Covid 19] ஏற்படுத்தும் பாதிப்பிற்கு இதுவரைக்கும் மருந்து கண்டறியப்படவில்லை. அதற்கு குறைந்தபட்சம் ஓராண்டுகள் தேவைப்படும் என கூறப்படும் நிலையில் வைரஸ் புதியவர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்துவதே ஒவ்வொரு நாட்டின் தலையாய கடமையாக இருக்கிறது. அந்தவகையில் வெளிநாட்டவர்கள் நிரம்பி வழியும் சிங்கப்பூர் மிகச்சிறப்பாக கரோனா வைரஸ் பரவலை தடுத்து வருவதாக செய்திகள் வந்தன. அதற்கு அந்த நாட்டின் குறைவான மக்கள்தொகை, சிறப்பான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், மருத்துவ வசதிகள் காரணமாக அமைந்தன.

கரோனா வைரஸ் முதன் முதலாக பரவியதாக கூறப்படும் வூஹான் நகரில் மிகப்பெரிய மருத்துவமனையை மிகவும் குறுகிய நாட்களில் கட்டிமுடித்தது சீன அரசு. இப்படிப்பட்ட வேகமான நடவெடிக்கைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. தற்போது சீனாவில் புதிதாக வைரஸ் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதற்கு மிகமுக்கியக்காரணம் மருத்துவத்துறைக்கு பெரிதும் தொழில்நுட்பம் உதவி செய்து வருவது தான். இந்தப்பதிவில் சில தொழில்நுட்பங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.

மருந்து வழங்கும் ரோபோக்கள்

Amid a novel #coronavirus outbreak, robots are deployed to deliver meals to travelers in isolation at a hotel in Hangzhou, China. #pneumonia pic.twitter.com/BgWZm4L1m6

— China Xinhua News (@XHNews) January 27, 2020

சீனாவில் இருக்கும் சென்ச்சென் புடு டெக்னாலஜி [Shenzhen-based Pudu Technology] உணவகங்களில் உணவு பரிமாறுவதற்கு ரோபோக்களை தயாரித்து வழங்கும் பணியில் இருக்கிறது. தற்போது இதே நிறுவனம் மருந்தகங்களில் மருந்துகளை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கொடுக்க வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல தனிமைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மருத்துவ ஊழியர்கள் நேரடியாக வைரஸ் பாதித்தவர்களிடம் தொடர்பு கொள்ளாமல் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

ட்ரோன்கள் பயன்பாடு

ரத்த மாதிரிகளை கொண்டு செல்வதற்கும் வைரஸ் பாதிப்பை அறிந்துகொள்வதற்கு தெர்மல் இமேஜிங் சோதனையை நடத்துவதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சில மாறுபாடுகளுடன் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்

நோய் பாதிப்பை அறிந்து கொள்ளவும் அதற்கடுத்த நடவடிக்கைளை மேற்கொள்ளவும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அலிபாபா நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சிஸ்டம் மூலமாக நோய் பாதிப்பை 96% துல்லியமாக அறிந்துகொள்ளமுடியும் என கூறப்பட்டுள்ளது.

சாட்பாட் தொழில்நுட்பம்

பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் தங்களது சாட்பாட் தொழில்நுட்பத்தை மாற்றிக்கொண்டுள்ளன. இதனைக்கொண்டு மக்கள் எளிமையாக நோய்க்கான அறிகுறி, ஆரம்பகால சிகிச்சைமுறை உள்ளிட்ட உதவிகளை தாங்களே செய்துகொள்ள முடியும். இது மிகப்பெரிய உதவியாக இருந்துவருவதாக கூறப்படுகிறது.

ஸ்கேன் செய்திடும் கேமராக்கள்

சீனாவில் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு பெரிய மக்கள் கூட்டத்தில் யார் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள், யாருடைய வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என்பதைக்கூட பெற முடியும். கண்காணிப்பு கேமராக்கள் நோய் பரவலை தடுப்பதில் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன.

ஸ்மார்ட் ஹெல்மெட்

Chengdu city, Sichuan Province, has armed #COVID19 epidemic control personnel with a high-tech smart helmet that can automatically measure passengers-by temperature when they enter a 5-meter range. The helmet will ring an alarm if anyone has a fever. pic.twitter.com/t56hpBwHVJ

— Global Times (@globaltimesnews) March 3, 2020

போலீசார் அணிந்திருக்கும் ஹெல்மெட் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருக்கும் இடத்தில் 5 மீட்டருக்குள் வரும் அனைவரின் வெப்பநிலையும் கணக்கிடும் தொழில்நுட்பம் ஹெல்மெட்டில் இருக்கும். சராசரி அளவைவிட எவருக்கேனும் அதிக வெப்பநிலை உடலில் இருந்தால் அலாரம் உடனடியாக ஒலித்துவிடும்.

கண்காணிப்பை மிக எளிமையாக ஆக்குகிறது இந்த சூப்பர் ஹெல்மெட்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version