How does Real Time Bidding Work? | Tamil

உதாரணத்திற்கு pamarankaruthu.com என Search Box  இல் அடித்து ‘Enter’ அழுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இணையதளத்தில் உள்ள தகவல்கள் காட்டப்படும். கூடவே விளம்பரங்களும் காட்டப்படுகின்றன அல்லவா? கவனித்து இருக்கிறீர்களா? இணையதளத்தில் இருக்கக்கூடிய தகவல்களை நான் upload செய்து வைத்திருக்கிறேன் அதனால் நொடிப்பொழுதில் காட்டப்படுகிறது. ஆனால் எங்கோ இருக்கின்ற விளம்பரங்கள் எப்படி எனது இணையதளத்தில் காட்டப்படுகிறது? இதற்கான விடை தான் ‘RTB’ அதாவது Real Time Bidding  தொழில்நுட்பம்.

 

டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் பயன்படுத்துகின்ற முக்கிய Term களை படிக்க தவறவிட்டவர்கள் கிளிக் செய்து படித்து கொள்ளுங்கள்


RTB என்பது இணையதளத்தை ‘Refresh’ செய்கின்ற நொடிப்பொழுதில் எந்த விளம்பரத்தை காட்டிட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு நடக்கும் வேலை (ஆங்கிலத்தில் Program) எனலாம்


 

RTB இல் பங்குபெறும் முக்கிய அமைப்புகள் 

 

 

Advertisers : விளம்பரங்களை இணையதளத்தில் பகிர நினைப்பவர்கள், முதலாளிகள். சரவணா ஸ்டோர் விளம்பரம் வருகிறதென்றால் அதில் Advertisers “Saravana  Store” தான்.

 

Publisher : எந்த இணையதளத்தில் விளம்பரம் காட்டப்பட இருக்கின்றதோ அந்த இணையதளம் “Publisher” என அழைக்கப்படும். ஒரு Publisher க்கு கீழாக ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட இணையத்தளங்களோ இருக்கலாம்.

 

DSP : ஆங்கில விரிவாக்கம் “Demand Side Platform”. DSP இன் மிக முக்கிய வேலை, Advertisers அவர்களது விளம்பரங்களை விரும்பிய அளவிற்கு இணையதளங்களில் இடம்பெற செய்வதற்கான தொழில்நுட்ப வசதியினை வழங்குவது, அதற்காக Inventory Source (பல இணையதளங்கள் அல்லது Publishers அடங்கியது) உடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது, RTB யில் பங்கேற்பது என மிக முக்கிய பணிகளை செய்கிறது.

 

SSP : ஆங்கில விரிவாக்கம் “Supply Side Platform”. இணையதளம் வைத்திருப்பவர்கள் அவர்களின் இணையதளத்தில் இருக்கின்ற ‘Ad Space’ ஐ நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பத்தினை வழங்குவது. நாம் inventory என சொல்வது  ‘Ad Space’ ஐ தான்.

 

Ad Exchange : Technology that allows advertisers to advertise and publishers to buy advertising in real time. Real Time  இல் விளம்பரதாரர்கள் விளம்பரங்களை விற்கவும்  இணையதள குழுமங்கள் விளம்பரங்களை வாங்கவும் தேவைப்படுகின்ற தொழில்நுட்பம்.


 

இணையதளத்தில் விளம்பரங்கள் தானாக தோன்றிவிடுவது கிடையாது. அந்த இணையதளத்தை நிர்வகிப்பவர் (Owner) Monetization இல் ஈடுபட வேண்டும். அதற்காக அந்த வசதியினை வழங்குகின்ற Google Ad Sense போன்றவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் வழங்குகின்ற “Publisher Ad Tag” ஐ இணையதளத்தில் விளம்பரம் எந்த இடத்தில் தோன்ற வேண்டுமோ அந்த இடத்தில் இட வேண்டும். உதாரணத்திற்கு 728×90 விளம்பரம் வேண்டுமென்றால் படத்தில் கட்டியுள்ள இடத்தில் “Publisher Ad Tag” ஐ இட வேண்டும். தற்போது அந்த வேலையையும் Google Ad Sense குறைத்து விட்டது. தானாகவே இடங்களை தெரிவு செய்து விளம்பரங்களை தோன்றிடச்செய்யும் வசதி வந்துவிட்டது.

 

இப்போது நீங்கள் இணையதளத்தை refresh செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் அது எந்த சர்வரில் சேமிக்கப்ட்டுள்ளதோ அங்கிருந்து பெறப்படும். “Publisher Ad Tag” அந்த இடத்தில் விளம்பரத்தை காட்டிட Google Ad Sense ஐ அணுகும்.  Google Ad Sense, RTB யில் பங்கேற்றோ அல்லது தன்னிடமுள்ள விளம்பரங்களில் முதன்மையாக வருவதையோ அந்த குறிப்பிட்ட இடத்தில் காட்டும். எண்ணற்ற DSP , SSP இருக்கின்ற சூழ்நிலையில் மிகச்சரியான அதேநேரத்தில் அதிக விலை கொடுக்கும் Advertiser இன் விளம்பரத்தை காட்டுவதற்கு இணையதள பக்கத்தை திறக்கும் அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நடக்கின்ற மிகப்பெரிய ‘Process’ தான் ‘RTB’.


 

Real Time Bidding எவ்வாறு நடைபெறுகிறது?

 

 

> Web User (இணையதளத்தை பார்க்கும் நபர்) இணையதள முகவரியை பிரவுசரில் அடித்து அந்த பக்கத்தை திறக்க வேண்டும் அல்லது ஏற்கனவே திறந்த பக்கத்தை refresh செய்திட வேண்டும்

> அப்போது இணையதள தகவல்கள் அதன் சர்வரில் இருந்து பெறப்பட்டு காட்டப்படும்

> நாம் ஏற்கனவே கூறியதைப்போல ‘Publisher Ad Tag’ போடப்பட்டு இருந்தால் அதுவும் load ஆகும்.

> ‘Publisher Ad Tag’ ஆனது Google Ad Sense இல் இருந்து பெறப்பட்டது என்றால் load செய்யப்படும் போது ‘Bid Request’ Google Ad Sense க்கு செல்லும். Google Ad Sense தான் SSP.

> SSP ஆனது ‘Bid Request’ மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும் user id தன்னிடம் இருக்கிறதா, ஏற்ற விளம்பரம் தன்னிடம் இருக்கிறதா என்பதனை பார்க்கும்.. இருக்கின்றபட்சத்தில் தான் தொடர்பு வைத்துள்ள DSP களை அணுகி ‘bid auction’ இல் பங்கேற்கும். அதிக தொகை அளிக்கின்ற ‘Advertiser’ இன் விளம்பரம் அந்த இடத்தில் காட்டப்படும்.

> user id , ஏற்ற விளம்பரம் தன்னிடம் இல்லாவிட்டால் ‘Ad Exchange’ க்கு request ஐ அனுப்பி பிற DSP க்களும் ‘Auction’ இல் பங்கேற்கும்படி செய்யும்.

Ad Exchange platform ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட DSP உடனோ அல்லது மற்ற Exchange களுடனோ தொடர்பினை வைத்திருக்கும்

> DSP க்கு கீழே இருக்கும் ஏதாவது ஒரு Advertiser,  bid இல் வென்றால் அந்த தகவல் ‘SSP’ க்கு அனுப்பப்பட்டு பிறகு DSP யில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் விளம்பரமானது இணையதளத்தில் காட்டப்படும்.

> இதற்க்கு பிறகு விளம்பரம் காட்டப்பட்டது குறித்த தகவல் ‘Advertiser’ க்கு தெரிவிக்க ‘DSP’ இல் record செய்து வைத்துக்கொள்ளப்படும்.

 


பாமரன் கருத்து

பாமரன் கருத்து
Share with your friends !