Site icon பாமரன் கருத்து

என் பிரம்மனே நீதானடா ….| Tamil Kavithai

தன்னை ரசிக்கும் ஒருவனை கண்டபிறகுதான் தான் அழகு என்று உணர்ந்ததாக ஒரு பெண் கூறுகிறாள்

இரு கண்கள் போதாதென்று
எட்டு கண்கள் கொண்டு
என்னை படைத்தவன்
பிரம்மாவாக இருந்தாலும் …

புல்வெளியில் துள்ளி விளையாடும்
என் கால்களில் பட்டு தெறித்து விழும்
புல்லின் நுனி பனித்துளியில்
என்முகம் கண்ட பாட்டாம்ப்பூச்சிகள்
சொல்லவில்லையே நான் அழகென்று !

மீன்களோடு நீந்தி விளையாடும்
பொன்மேனியில் நனைந்து ஓடும்
குளத்தின் தெளிந்த நீரில்
என்னழகு கண்ட செந்தாமரைகள்
சொல்லவில்லையே நான் அழகென்று

21 ஆண்டுகளுக்கு பின்
உன் கண்கள் கண்டு
நீ மவுனம் களைத்து
சொன்ன பின்னரே
நான் அறிகிறேன்
நான் அழகென்று …

நீயின்றி வேறு யார்
என் பிரம்மனே நீதானடா ….






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version